கழற்சிக்காயை தூர தூக்கி போடாதீங்க.. இத்தனை நன்மைகளா.. ஆண்களே நோட் பண்ணிருங்க.. கலக்கல் கழற்சிக்காய்
சென்னை: பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் நீர்க்கட்டிகளுக்கு கழற்சிக்காய்கள் உதவும் என்பது அனைவரும் அறிந்தது என்றாலும், வேறு என்னென்ன நன்மைகளை இந்த கழற்சிக்காய் தருகின்றன தெரியுமா?
இந்த கழற்சிக்காய்கள் பார்ப்பதற்கு முட்டை போலவே இருக்கும்.. உள்ளே பருப்பு காணப்படும். அந்த பருப்பு மிகவும் கசப்புத்தன்மை வாய்ந்தது.. இதன் காய்களை உடைத்து, அதிலுள்ள பருப்புகளை காயவைத்து அரைத்து, பவுடராக்கி நிறைய உடல்நலக்கோளாறுகளுக்கு பயன்படுத்துவார்கள்.
உருண்டைகள்: இந்த பவுடரில், கால் ஸ்பூன் மிளகு தூள், சிறிது தேன் கலந்து, குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இந்த உருண்டையை தினமும் 2 வேளையும், 2 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, கர்ப்பப்பையில் உருவாகியிருக்கும் நீர்க்கட்டிகள் கரைந்துவிடும்.

இந்த பவுடருடன் சிறிது தண்ணீரை குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது தடவினால், விரைவில் குணமாகிவிடும்.. அதேபோல, உடம்பில் வீக்கங்கள் இருந்தாலும், இந்த கழற்சிக்காய் இலைகள், விதைகளை விழுதுபோல அரைத்து பூசலாம்..
தொழுநோய்: அன்றைய தினங்களில், தொழுநோய் மற்றும் யானைக்கால் வியாபதி என்ற இந்த 2 பெரும் பிரச்சனைகளுக்கு நம்முடைய முன்னோர்கள் கையிலெடுத்தது இந்த கழற்சிக்காய்களைத்தான். இந்த விதைகளை, ஒரு வாணலில் வறுத்து, அதை பொடி செய்து, தினமும் ஒரு கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் தொழுநோய் நீங்கிவிடுமாம்..
காய்களை போலவே, கழற்சிக்காயின் பூ, விதை, வேர்கள், பட்டை, இலைகளில் பல நன்மைகள் ஒளிந்திருக்கின்றன.. இந்த இலைகளை எடுத்து கொண்டால், சருமத்துக்கு மிகவும் பாதுகாப்பை தரக்கூடியது.. உடம்பில் வீக்கங்கள் இருந்தாலும், இந்த கழற்சிக்காய் இலைகள், விதைகளை விழுதுபோல அரைத்து பூசலாம்.
கழற்சிக்காய்: அதேபோல, கழற்சிக்காய் கொடிகளின் இலைகள்தான், யானைக்கால் வியாதிக்கு தீர்வாகிறது.. இந்த இலைகளை பக்குவமாக மருந்து வடிவில் சாப்பிட்டு வந்தால், யானைவியாதியை பரப்பும் தொற்றுண்ணிகளை அழிக்கிறது.
அதேபோல, இந்த இலைகளை தூள் செய்து, அதில், பற்களை தேய்த்து வரலாம். இதனால், பல் வலி குறைவதுடன், ஈறுகள் பலப்படும்.. பல் சொத்தை விழுவது போல இருந்தால், சொத்தை பல் தோன்றும் இடத்தில் உடனே இந்த பவுடரை வைத்து தேய்த்தாலே போதும்.. இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீரில் வாய்கொப்புளித்து வந்தாலும், வாய் துர்நாற்றம் நீங்கி, கிருமிகளும் அண்டாமல் இருக்கும்
வேர்ப்பட்டைகள்: கழற்சிக்காய் வேர்ப்பட்டைகளை, ஆயுர்வேத மருத்துவத்தில் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள்.. இந்த பட்டைகளை அரைத்து பயன்படுத்துவதால், கட்டிகள் கரைந்துவிடும்.
அதேபோல சில ஆண்களுக்கு ஏற்படும் விரைவாதம் குறையவும், இந்த காய்களின் விதைகளை பயன்படுத்தலாம். ஒரு வாணலியில் கழற்சிக்காய் விதைகளை லேசாக வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சிட்டிகை அளவு பொடியை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே விரைவாதம் நீங்குமாம். இப்படி பல அற்புத பலன்களை தரும் இந்த கழற்சிக்காயை, மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் மருந்தாக எடுத்துக் கொண்டால், ஆரோக்கியத்தில் கோடிபலன் கிடைக்கும்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications