தொங்கும் தொப்பை.. தொள தொள ஊளைச்சதையை விரட்டும் பிரண்டை.. அதென்ன பிரண்டை உப்பு.. அட, இது ஒன்னு போதுமே
சென்னை: வயிறு உபாதைகளை நீக்குவதுடன், உடல் எடையை குறைக்க பிரண்டை எந்த அளவுக்கு பயன்படுகிறது தெரியுமா?
பிரண்டையை பொறுத்தவரை, பல வகைகள் உண்டு.. வஜ்ஜிரவல்லி என்ற சிறப்பு பெயர் இந்த பிரண்டைக்கு உள்ளது.. எக்கச்சக்க மருத்துவ குணமுடையது இந்த பிரண்டை.

பிரண்டை பயன்கள்: ஆயுளை நீட்டிக்கும் மூலிகை என்றால் அது பிரண்டைதான்.. ஜீரண சக்தியை பெருக்கும் இந்த பிரண்டையை, பாலில் உப்பு கலந்து குடித்துவந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும் என்பார்கள்.... உடலின் பலத்தை கூட்டக்கூடியது..
ஞாபக சக்தியை தரக்கூடிய இந்த பிரண்டை மூளை நரம்புகளை பலப்படுத்தக்கூடியது. அதனால்தான், வளரும் குழந்தைகளுக்கு இந்த பிரண்டையை துவையல் செய்து தர வேண்டும் என்பார்கள். உடலில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டால், சுளுக்கு, பிடிப்பு, வலி ஏற்பட்டால், இந்த பிரண்டை மருந்தாகிறது.. எலும்புகளுக்கு வலு தரக்கூடியது..
வாயு கோளாறு: வாயு தொந்தரவு இருப்பவர்கள், பிரண்டையை அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாம.. இதனால், செரிமான சக்தி அதிகமாவதுடன், அஜீர கோளாறும் நீங்கும்.. முக்கியமாக மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பேருதவி புரிகிறது.. மலத்துவாரத்தில் எரிச்சல், அரிப்பு பிரச்சனை இருந்தால், பிரண்டையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டாலே போதும். பிரண்டையை நெய்யில் வதக்கி, கல்உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூலநோயும் தீரும்..
சாறு உடலில்பட்டால், அரிப்பையும் நமைச்சலையும் ஏற்படுத்தும். இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே பெரும்பாலும் மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே அதிகமாகக் கிடைக்கிறது.
மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்ய பிரண்டை போல அருமை மருந்து வேறு கிடையாது. 6 ஸ்பூன் பிரண்டையில் சாறு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டாலே மாதவிடாய் சீராகும்..
மூட்டு வலி இருப்பவர்கள், பிஞ்சு பிரண்டையை வைத்து எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தலாம்.. பிஞ்சு பிரண்டையை சுத்தம் செய்து, நல்லெண்ணெய்யில் மூழ்கும் அளவுக்கு ஊற்றி வதக்க வேண்டும்.. இறுதியில் அந்த எண்ணெய்யை தனியாக வடிகட்டி எடுத்து வைத்துக் கொண்டால், மூட்டு வலி, முழங்கால் வலிக்கு தேய்த்து வரலாம்.
உடல் எடை: உடல் எடை குறைக்க வேண்டுமானால், இந்த பிரண்டையை தாராளமாக உணவில் சேர்த்து கொள்ளலாம்.. அடிவயிற்றுப்பகுதியில் சதை அதிகமாக இருந்தால், அதனை பிரண்டை கரைத்துவிடும். அதனால்தான், "பெத்த வயிற்றில் பிரண்டையை கட்டு" என்று ஒரு பழமொழியே சொல்வார்கள்..
அல்லது பிரண்டை உப்பு தயாரிக்கலாம்.. அதாவது, பிரண்டையை காயவைத்து, அதை நெருப்பில் எரித்து சாம்பலாக்கி கொள்ள வேண்டும்... 1 கிலோ சாம்பல் என்றால், அதை 3 லிட்டர் தண்ணீல் கரைத்துவிட வேண்டும்.
பிரண்டை உப்பு: சிறிது நேரம் கழித்து, தெளிந்த நீரை மட்டும் பீங்கான் பாத்திரத்தில் ஊற்றி, 8 முதல் 10 நாள்கள் வெயிலில் உலரவைக்க வேண்டும்.. இப்போது தண்ணீர் வற்றிப்போய், அடியில் உப்பு மட்டும் தேங்கி கிடக்கும். இந்த பிரண்டை உப்பை 2 முதல் 3 கிராம் எடுத்துக்கொண்டு, பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ஊளைச்சதையும் குறையுமாம்.
பெருங்குடல் பிரச்சனையை தீர்த்து, புழுக்கள் இருந்தாலும் பிரண்டை வெளியேற்றிவிடும்.. பிரண்டை பொடி என்றே நாட்டுமருந்து கடைகளில் விற்கிறார்கள்.. அதையும் பயன்படுத்தலாம்.. ஆனால், வீட்டிலேயே துவையல் போல செய்து சாப்பிட்டால் பலமடங்கு நன்மை.. அதனால், பிரண்டையாகவே வாங்கி பயன்படுத்தலாம்.
-
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications