Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிட்னியில்.. கல்லை கரைக்க இது போதுமே.. வாழைமரத்தடியில் "ஜூஸ்".. சிறுநீரக கற்களை கரைக்கும் முள்ளங்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுநீரகத்தில் கற்கள் தோன்ற என்ன காரணம் தெரியுமா? இந்த கற்களை உணவுமுறையிலேயே சரிசெய்துவிட முடியுமா? முறையான உணவுப்பழக்கத்தை கடைப்பிடித்தால், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க முடியும்.. ஆரம்ப கட்டத்திலேயே இதனை நிவர்த்தி செய்யும் முடியும்.

சிறுநீரகத்தில் கற்கள் தோன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.. தண்ணீர் அதிகமாக குடிக்காவிட்டால், சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும்.. சோடியம் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் சிறுநீரில் கால்சியம் அதிகமாக சேர்ந்துவிடும். இதுதான் கற்களாக உருமாறுகிறது.

Do you know the Excellent Benefits of Raddish and what are the Best food to remove Kidney Stones

காரணங்கள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் உணவுகளை அதிகமாக சாப்பிட்டாலும் இதுபோன்ற பிரச்சனைகள் வரும்.. புரோட்டீன் அதிகமாக இருக்கும் உணவுகள், குறிப்பாக, சிவப்பு இறைச்சி, சிக்கன், மீன் போன்றவற்றில் இருக்கும் புரதம் சிறுநீரில் உள்ள யூரிக் ஆசிட் அளவை அதிகமாக்கவிடும்.. இதுவும் சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகலாம்..

சோடா, சர்க்கரை நிறைந்த கூல்டிரிங்க்ஸ்களும், சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகலாம்.. கலருக்காகவும், சுவைக்காகவும் கலக்கப்படும் சேர்க்கை பொருட்களாலும் கற்கள் தோன்றலாம்.

தீர்க்க என்ன வழி: உணவு முறைகளில் இவைகளை ஓரளவு சரிசெய்யலாம்.. கற்களின் அளவு 5 மிமீக்கு குறைவாக இருந்தால் மட்டுமே வீட்டு மருத்துவம் பயன்படும்.. கற்களின் அளவு பெரிதானால், டாக்டரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும். இந்த கற்களை பெரிதாகாமல் இருக்க செய்வதில் பழச்சாறுகளுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.

துளசியில் ஜூஸ் தயாரித்து தேன் கலந்து குடிக்கலாம்.. எலுமிச்சையில் ஜூஸ் தயாரித்து உப்பு சேர்க்காமல் குடிக்கலாம்.. தக்காளியில் ஜூஸ் தயாரித்து மிளகுதூள் சேர்த்து குடிக்கலாம்.. இவைகளை வெறும் வயிற்றில் குடிக்கும்போது, நச்சுக்களும், கழிவுகளும் கரைவதுடன், மீண்டும் கற்கள் உருவாவதும் தடுக்கப்படும். பெரிய கற்களும் உருவாகாமல் தடுக்கப்படும்.

வெள்ளரிக்காய்கள், மாதுளம், திராட்சை பழங்கள் சிறுநீரக கற்களையும் வெளியேற்ற உதவும்.. முடிந்தால், விதைகளுடன் சாப்பிடும்போது, நார்ச்சத்து கூடுதலாக கிடைக்கும்.. ஆப்பிள் சைடர் வினிகர் சிறுநீரகத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தடுப்பதிலும், ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.. இந்த ஆப்பிள் சைடர் வினிகரில் சிட்ரிக் அமிலம் உள்ளதால், சிறுநீரக கற்களை கரைக்க உதவுகிறது.

ஜூஸ்கள்: பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற நீர்க்காய்களை சேர்த்து கொள்ள வேண்டும்.முள்ளங்கியையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம். இவைகள் எல்லாம் சிறுநீர் பெருக்கிகளாக செயல்படுகின்றன.

சமையலில், வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு பொரியல் அல்லது ஜூஸ் போல செய்து சாப்பிடலாம். கீரைகளில், அகத்திக்கீரையும், புதினாவும், துளசியும் சிறுநீரக கற்களை கரைக்க பெரிதும் துணைபுரிகின்றன..

பார்லி தண்ணீர்: அதிக தண்ணீரை குடிக்க வேண்டும்.. குறைந்தது 8 டம்ளர் தண்ணீராவது குடிக்க வேண்டும்.. சிறு சிறு கற்களும் நொறுங்கி வெளியேற துணைபுரியும்.. பார்லி தண்ணீரை நிறைய குடிக்கலாம்.. பார்லியை நன்றாக வேகவைத்து, அந்த தண்ணீரை மட்டும் குடித்து வந்தால், அதிக சிறுநீர் வெளியேறும்.. அப்போது சிறுநீரகத்தில் உப்பு சேர்வதும் தடுக்கப்படும்..

சீமைக் காட்டுமுள்ளங்கியையும் பயன்படுத்தலாம். இது ஒரு ஆயுர்வேத மூலிகை. இதன் வேர்களிலிருந்து சாறு தயாரித்து குடித்தாலும், சிறுநீர் கற்கள் உடைத்துவிடும்.. அனைத்தையும்விட வாழை மர சாறு மிகச்சிறந்த முறையில் கற்களை வெளியேற்ற தூண்டுகின்றன.. வாழை மரத்தை வெட்டி, அடிமரத்திலிருந்து இந்த சாறு எடுக்கப்படும். சிறுநீரக கற்கள் எளிதாக கரைய, இந்த சாறு போதுமானது.. வாழைத்தண்டு சாறுவிட இது பெஸ்ட்.

தவிர்க்க வேண்டும்: சர்க்கரை, உப்பு, சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, பாதாம், பிஸ்தா, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, கூல்டிரிங்ஸ்கள், சாக்லேட், ஆல்கஹால் இவைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+