ஆரஞ்சு பழத்தில் ஆச்சரியம்.. ஆரஞ்சு பழம் எப்போ சாப்பிடலாம்? "இவங்க" ஆரஞ்சு பழம் சாப்பிடவே கூடாது
சென்னை: புற்றுநோய் முதல் ரத்த சர்க்கரை வரை குணப்படுத்தக்கூடிய சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது.. இந்த பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?
வைட்டமின் C, A, B6, ப்ரோடீன், நார்ச்சத்துக்கள், போலெட்ஸ், தையாமின், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் இந்த பழத்தில் உள்ளன..

நோய் எதிர்ப்பு சக்தி: ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. அத்துடன், இந்த பழத்திலுள்ள வைட்டமின் C, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.. இதனால், உங்களுக்கு புற்றுநோய் ஏற்படாமல் காக்க இந்த பழம் உதவுகிறது. தினமும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தாலே, பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைவதாக ஆய்வுகள் சொல்கின்றன.
ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.. முடி கொட்டுதலை தடுத்து நிறுத்துவதுடன், முடி வளரவும் வழி வகுக்கும்...
செரிமானம்: நார்ச்சத்து அதிகமுள்ள ஆரஞ்சு பழம், செரிமானத்துக்கு உதவுகிறது.. குடலை சுத்தம் செய்து, குடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது.. கொழுப்பையும் குறைக்கவும் உதவும். தேவையற்ற கலோரிகளையும் எரிக்கிறது. அதனால்தான், உடல் எடை குறைப்பதில் ஆரஞ்சு தவிர்க்க முடியாத பழமாகிறது.
ஆரஞ்சு இதயத்திற்கு மிகவும் நல்லது.. கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தக்கூடியது என்பதால், இதயநோய்கள், பக்கவாதம் போன்ற அபாயத்தை குறைக்கிறது. பல்வலி இருந்தால், ஆரஞ்சு சாப்பிட்டால் போதும்.. உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி இப்படி உஷ்ண பிரச்சனைகளுக்கு ஆரஞ்சு பழம் கைகொடுக்கிறது.. எந்தவிதமான சிறுநீர் கோளாறுகள் இருந்தாலும், இரவில் அரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் தீர்வு கிடைக்கும்.
சிட்ரஸ் பழம்: குளிர்காலங்களில் ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.. மேலும், குளிர்காலத்தில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சனைகளான, மந்தமான சருமம், வறண்ட கூந்தல் போன்றவற்றை தீர்க்கவும் இந்த பழம் உதவுகிறது. ஆரஞ்சு சிட்ரஸ் வகையை சேர்ந்த பழம் என்பதால், சாப்பாடு சாப்பிட்டதும்தான் ஆரஞ்சு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் அமிலம் உண்டாக்கிவிடும்.
மூட்டு வலி, உடம்பில் அதிக உப்பு சத்து போன்ற உபாதைகளுக்கு இந்த ஆரஞ்சு கைகொடுக்கிறது.. கர்ப்பிணிகளுக்கு ஆரஞ்சு ஜூஸ் மிகவும் நல்லது.. இதனால், கர்ப்பத்திலுள்ள குழந்தைகளும் தோல் ஆரோக்கியம், கண் பார்வை ஆரோக்கியம் பெறும்..
இந்த ஆரஞ்சுபழத்தை அசிடிட்டி, அஜீரண பிரச்சனை இருப்பவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்கலாம்.. மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அதிகரிக்கும். இருமல் உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications