Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேப்பங்கிழங்கில்.. இவ்ளோ இருக்கா? ரத்த சோகை முதல் நீரிழிவு வரை போக்கும் சேப்பங்கிழங்கு கீரை: சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், சாகும்வரை கண்களுக்கு எந்தவிதமான கோளாறுகளும் நெருங்காதாம்.. அந்தவகையில், கிழங்கு மட்டுமல்ல, சேப்பங்கிழங்கின் இலைகளும் பெருத்த நன்மைகளை தரக்கூடியவை.

சேப்பங்கிழங்கை வைத்து அமெரிக்காவில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அந்த ஆய்வில், புற்றுநோய்க்கு எதிராக சேப்பங்கிழங்கு செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, சேப்பங்கிழங்கில் உள்ள கிரிப்டோக்சாந்தின், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறதாம்.

Do you know the Health Benefits of Seppankizhangu Leaf and Taro Leaves are the Best for Women

கண் பிரச்சனை: அதேபோல, சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வருபவர்கள் கண் கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே ஏற்படாது.. காரணம், பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் இந்த சேப்பங்கிழங்கில் உள்ளதால், கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது..

புரதம், கொழுப்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்களை கொண்டது இந்த சேப்பங்கிழங்கு. 132 கிராம் வேகவைத்த ஒரு கப் சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருகிறது.. இதர சத்துகளும் இதில் அடங்கும். கால்சியம் நிறைந்த சேப்பங்கிழங்கு, பற்களுக்கும் எழும்புகளுக்கும் நல்லது.. நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால், அஜீரண கோளாறுகள் நீங்குகிறது.. இதனால் மலச்சிக்கல் தீர்கிறது.. இதனால் உடல் எடையும் குறைகிறது.

நரம்புத்தளர்ச்சி: நரம்பு தளர்ச்சியையும், சரும சுருக்கத்தை இந்த சேப்பங்கிழங்கு சரி செய்கிறது.. உடல் பலவீனமாக இருப்பவர்கள், வாரம் ஒருமுறையாவது இந்த கிழங்கை சமைத்து சாப்பிட்டு வரலாம். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்வதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது.

வயிற்றிலுள்ள பூச்சிகளை ஒழிக்க இந்த கிழங்கு துணைபுரிகிறது.. அரிப்பு, அலர்ஜி போன்ற தோல் பிரச்சனைகள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், 2 வயதுக்கு பிறகு அவர்களுக்கு சாப்பிட தரலாம்.

சேப்பங்கிழங்கு இலைகள்: சேப்பங்கிழங்கை போலவே, அதிக சத்துக்களை கொண்டது அதன் இலைகள்.. சேப்பங்கிழங்கு இலையில் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. பாம்புக்கடி, தேள்கடி போன்ற நச்சுத்துன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைக்கு உள்ளது.

பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கவும் இந்த இலை துணைபுரிகிறது.. முக்கியமாக, உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலையை சமைத்து சாப்பிட்டு வரலாம். அதேபோல, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதால், நீரிழிவு நோயாளிகளும் இந்த கிழங்கை எடுத்து கொள்ளலாம்.

Do you know the Health Benefits of Seppankizhangu Leaf and Taro Leaves are the Best for Women

நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் கிழங்குகளை சாப்பிட கூடாது என்பார்கள்.. ஆனால், இந்த சேப்பங்கிழங்கு இலைச்சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்கிறார்கள். இந்த இலைச்சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென அதிகரிக்கவும் செய்யாதாம்.

ரத்தசோகை: ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள், இந்த கீரையை தவறவிடக்கூடாது.. உடல் எடை குறைய நினைப்பவர்களும் இந்த கீரையை கட்டாயம் சமைத்து சாப்பிட வேண்டும் ஆனால், பச்சையாக இலையை உண்ணக்கூடாது.. இந்த கீரையில் தண்ணீர் விட்டு வேகவைத்து, அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேக வைத்த இலைகளை மட்டும் விருப்பம் போல் சமைத்து சாப்பிடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+