முருங்கைக்கீரை.. நீரிழிவு நோயாளிகள் முருங்கையை இப்படி சாப்பிடுங்க.. முருங்கைப்பூ கஷாயம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகளின் ராஜா என்று சொல்லப்படும் முருங்கையில், உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? சர்க்கரை நோயாளிகள், இந்த முருங்கைக்கீரையினால் அடையும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

முருங்கையில் உள்ள சத்துக்களை லிஸ்ட் போட முடியாது.. இந்த முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் A, C, B, பீட்டா கரோட்டீன், B காம்ப்ளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், கொழுப்பு இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளன.

Do you know the super benefits in Drumstick Leaves and Drumstick Keerai is the excellent food for Diabetics

முருங்கைக்கீரை: அதனால்தான், சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற கீரையாக இது உள்ளது.. இந்த முருங்கையில் உள்ள குர்செடின், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும்.

அதோடு, முருங்கையில் உள்ள குளோரோஜெனிக் அமிலம், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கவும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.. அதாவது, ஆல்கலாய்ட்ஸ், டேனின், அமினோ ஆசிட்ஸ் போன்றவைதான், சர்க்கரையை குறைக்க பேருதவி செய்கிறது.

சத்தான பொரியல்: வழக்கமாக, முருங்கைக்கீரையை பொரியல், கூட்டு, குழம்பு செய்வோம்.. முருங்கைக்கீரையில் கசப்பு தெரியாமல் இருக்கவும், கூடுதல் சத்துக்கள் கிடைக்கவும், முட்டைகளை கலந்து பொரியல் செய்யலாம். அல்லது வேர்க்கடலையை பொடித்து போட்டு பொரியல் செய்யலாம்.. அந்தவகையில், சர்க்கரை நோயாளிகள், இந்த முருங்கைக்கீரையை பல வகைகளில் சமைத்து சாப்பிடலாம்.. குறிப்பாக, கம்பு மாவுடன் சேர்த்து தோசை போல சுட்டு சாப்பிடலாம்..

அதாவது, கம்புமாவு, தோசைமாவு, அரிசி மாவு, மூன்றையும் சமமாக எடுத்து, சிறிது தண்ணீர், உப்பு, சேர்த்த தோசை மாவு பதத்திற்கு கலக்க வேண்டும். பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயத்தை தோசை மாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு, இளசான முருங்கைக்கீரையை பொட்டிப்பொடியாக நறுக்க அதையும் மாவில் கொட்டி, தோசை வார்த்து சாப்பிட்டால் சத்துக்கள் நிறைந்த டிபன் ரெடி.

கேழ்வரகு அடை: அதேபோல, கேழ்வரகு மாவில் அடை செய்யும்போது, முருங்கை இலை கொழுந்தை அதில் சேர்த்து செய்வார்கள்.. கேழ்வரகும் இரும்பு சத்து.. முருங்கையும் இரும்பு சத்து.. இந்த 2 இரும்பு சத்தும் ஒன்று சேரும்போது, கூடுதல் நன்மை கிடைக்கும்.. முருங்கைக்கீரையுடன் எள் சேர்த்து சாப்பிட்டாலும், நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் என்பார்கள்..

இந்த முருங்கைக்கீரையில் சத்தான சப்பாத்தி செய்யலாம்.. ஒரு பாத்திரத்தில் சப்பாத்தி மாவு, உப்பு, சின்ன வெங்காயம், முருங்கை கீரை, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து கலந்து, தண்ணீர் ஊற்றி பிசைந்து, சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சப்பாத்தி போலவே ஒவ்வொன்றாக சுட்டு எடுக்கலாம்.

பூக்கள் கஷாயம்: முருங்கை இலையுடன், விதைகள், பூக்களை சேர்த்து பொடி செய்து சாப்பிடலாம்.. இந்த பூக்கள், இலைகளை தனித்தனியாக உலக வைத்துக்கொண்டு, அதை பொடியாக்கி கொள்ள வேண்டும். இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், இன்சுலின் உற்பத்தியை ஊக்குவிப்பதாக சொல்கிறார்கள்.. இதனால், உடலின் நச்சுத்தன்மையும் நீங்குகிறது.

அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கைக்காயின் கஷாயம், மிகவும் நல்லது.. இந்த கஷாயமும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு, வயிற்றின் வளர்சிதை மாற்ற விகிதத்தையும், இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்க செய்கிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+