தோசை மாவு.. இட்லிக்கு அரைக்கும்போது.. இந்த ஒரே ஒரு பொருளை சேர்த்து பாருங்க! வியப்பூட்டும் சத்துக்கள்
சென்னை: இட்லி இன்றுவரை தரம்வாய்ந்த சத்தான உணவாக இருக்க என்ன காரணம் தெரியுமா? கூடுதல் சத்து நிறைந்த இட்லி கிடைக்க இந்த குட்டி டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க
வழக்கமாக புழுங்கல் அரிசி, உளுந்து இந்த 2 பொருளையும் சேர்த்தே தோசைக்கு மாவு அரைக்கிறோம். மற்ற பொருட்களை பயன்படுத்தாமல், காலம்காலமாக இந்த 2 பொருட்களை மட்டுமே பயன்படுத்தி மாவு அரைக்க என்ன காரணம்?

சத்தான உணவு: பொதுவாக, தானியம், பயிறு வகைகளில், நார்ச்சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன.. குறிப்பாக பயறு வகை புரோட்டீன்களில் லைசின் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகை புரதத்தில் மெத்தியோனைன் என்ற அமினோ அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன.. நம்முடைய பாரம்பரிய உணவில் பொங்கல் அடங்கியிருப்பதன் காரணமே அரிசியும், பாசிப்பருப்பும்தான்.
எனவே தானிய வகையான அரிசியும், உளுந்தும் இணையும்போது, புரோட்டீன் நிறைந்த உணவாக அது மாறுகிறது.. அரிசியையும் உளுந்தையும் அரைத்து மாவாக்குவதால், உணவு பொருட்களும் நுண்மையாக்கப்படுகின்றன.. உளுத்தம் பருப்பில் அதிக அளவு நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் அதிகமாக உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு பயன் தருகின்றன.
எலும்புகள்: கொழுப்பின் அளவை பராமரிப்பதன் மூலமும், பெருந்தமனி தடிப்பு தோல் அழற்சியை தடுப்பதன் மூலமும், நம்முடைய இதய செயல்பாட்டை சீராக வைத்திருக்க உதவுகிறது.. இதனால் எலும்பு ஆரோக்கியம் காக்கப்படுகிறது.
காரணம், 100 கிராம் உளுந்தில் 267 மிகி மெக்னீசியம் இருப்பதால், பற்கள், எலும்புகளுக்கு தேவையான கால்சியம் கிடைக்கின்றன. எனவேதான், இட்லி இன்றுவரை சிறந்த உணவாக விளங்குகிறது. அதுவும் ஆவியில் வேகவைப்பதால், குழந்தைகள் முதல் இதய நோயாளிகள் வரை சாப்பிடக்கூடிய உணவாக உள்ளது. கொழுப்பு சத்து இல்லாததால், ஆரோக்கிய உணவாக திகழ்கிறது.
வெள்ளை உளுந்து: எனினும் இதே இட்லியை இன்னும் கூடுதல் சத்துக்களுடன் பெற வேண்டுமானால், வெள்ளை உளுந்துக்கு பதில், கருப்பு உளுந்து பயன்படுத்தினால் நல்லது.. ஏனென்றால், இந்த பருப்பின் தோலில்தான் Leuconostec Mesenteroides என்ற பாக்டீரியா நிறைய உள்ளதாம்..
இதேபோல, சோயா பீன்ஸ் கலந்தும் இட்லி மாவு அரைக்கலாம்.. அரிசி, உளுந்து இரண்டையும் தனி தனியாக எப்போதும்போல் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு, வெந்தயம், சோயா பீன்ஸ் இந்த இரண்டு பொருட்களும் ஒன்றாக ஊறவைக்க வேண்டும்...
சத்தான மாவு: முதலில் வெந்தயம், சோயா பீன்ஸை கிரைண்டரில் தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும்... பிறகு உளுந்தை நன்றாக வடிகட்டி கிரைண்டரில் அரைக்க வேண்டும். கையில் ஒட்டாத நிலைக்கு வந்தவுடன் அதை எடுத்துவிடலாம். பிறகு அரிசியை போட்டு நன்றாக அரைக்க வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள உளுந்து மாவுடன் அரிசி மாவையும் கலக்கலாம்.
அரிசி எப்போதுமே வெள்ளை நிறமாக வரும் வரை சுத்தமாக கழுவ வேண்டும்.. இட்லியின் வெண்மை நிறத்துக்கு காரணமே இந்த முக்கியமான டிப்ஸ்தான். அதேபோல, அரிசியை 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். அதற்கு மேல் அரிசி ஊறினால் மாவு விரைவில் புளிப்புத்தன்மையை தந்துவிடும். உளுந்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் ஊறவைக்கூடாது.. அதேபோல் மாவு அரைக்கும்போதும் அதிக நேரம் அரைக்கக் கூடாது.
வாழையிலை: மாவு அரைக்கும்போது ஐஸ் வாட்டர் ஊற்றி மாவு அரைக்க வேண்டும். மாவு புளிக்காமல் இருக்க வாழை இலையை போட்டு வைக்கலாம். அல்லது 2 வெற்றிலையை போட்டு வைக்கலாம். ஆனால், வெற்றிலையின் உள்பக்கம் மாவில் படும்படி வைக்க வேண்டும்.
100 கிராம் புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி, 100 கிராம் பச்சரிசி, 150 கொள்ளு, முக்கால் கப் உளுத்தம் பருப்பு, 2 ஸ்பூன் வெந்தயம் போன்றவற்றை நன்றாக 3 முறை கழுவி, 6 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு அனைத்தையும் போட்டு மாவு அரைத்து 5 மணி நேரம் புளிக்க வைத்து தோசை ஊற்றினால் போதும். கொள்ளு பயன்படுத்த விருப்பமில்லையானால், அவல் பயன்படுத்தி கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications