சங்கரா மீன்.. உடல் எடை குறையணுமா? சங்கராவை விடாதீங்க.. அதிலும், "சங்கரா மீன் தலை"யை தூக்கி போடாதீங்க
சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், அபார ருசியை தரக்கூடிய குழம்பு மீன்களில் ஒன்றுதான், சங்கரா மீன். ஆங்கிலத்தில் ரெட் ஸ்னாப்பர் என்பார்கள்.. இதில் உள்ள சத்துக்களை பார்த்தாலே, இந்த மீனின் நன்மைகளை புரிந்து கொள்ளலாம்.
இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, தாமிரம், செலினியம், தியாமின், நியாசின், பாந்தோத்தேனிக் அமிலம், ஃபோலேட், வைட்டமின் பி-12, வைட்டமின் A, E,போன்றவை இதில் அடங்கி உள்ளன.

ஆரோக்கியம்: இதிலுள்ள செலினியம், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க செய்வதுடன், தைராய்டு ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது.. இதிலுள்ள வைட்டமின் பி12, நரம்பு செல்களுக்கும், ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் E, உடலின் தோல் பராமரிப்புக்கும், கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A, உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது..
இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்கள் தடுக்கப்படுகின்றன. இதிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
மூளை ஆரோக்கியம்: மூளை ஆரோக்கியத்திற்கும், மனச்சோர்வை விரட்டவும், மனநிலை மேம்பாட்டிற்கும், இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் சங்கரா மீன் பெரிதும் உதவுகிறது. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், வாரத்தில் 2 நாளாவது சங்கரா மீனை பயன்படுத்தலாம். காரணம், குறைந்த அளவிலான கலோரி அதிக புரதம் கொண்டவை... ஆனால், உடல் எடை குறைய, சங்கரா மீனில் குழம்பு, வறுவல் செய்வதைவிட, கிரில் செய்து சாப்பிட்டால் இன்னும் சத்துக்கள் அதிகம் கிடைக்கும் என்கிறார்கள்..
அல்லது இந்த சங்கரா மீனின் தலையை மட்டுமே வைத்து, சிலர் சூப், ரசம் போல செய்வார்கள். சின்னவெங்காயம், இஞ்சி பூண்டு, தக்காளி, மிளகு, சீரகம் எல்லாம் சேர்த்து சூப் போல, ரசம் போல செய்து சாப்பிடுவார்கள். எந்த மீனிலுமே, மீனின் சதைப்பகுதியைவிட, மீனின் தலைப்பகுதிதான் அதிக ருசி என்பதை மறந்து விடக்கூடாது.

அபார ருசி: சமையலில் சாப்பிட வேண்டுமானால், சிலர் இதை கேரளா ஸ்டைலில் செய்யப்படும் பொழிச்ச மீன் போல செய்யலாம். அதாவது காரசார மசாலாக்களை எண்ணெய்யுடன் கலந்து, சங்கரா மீனில் தடவி, அந்த மீனை, வாழை இலையில் மூடி, இட்லி பாத்திரத்தில் அல்லது அடுப்பில் நன்கு சுட்டு எடுத்தால் ருசி அபாரமாக இருக்குமாம். ஆனால், சங்கரா மீனை எப்படி சாப்பிட்டாலும் அபார ருசியை தரும் என்பது வேறு விஷயம்.
இவ்வளவு சக்திகள் இருந்தாலும், சங்கராவில் அதிக அளவு பாதரசம் இருக்கலாம்.. அதனால், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள், டாக்டரின் ஆலோசனையை பெற்றே இந்த மீனை சாப்பிட வேண்டும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications