நெளியும் வயிற்று பூச்சி முதல் ஆண்மை குறைபாடு வரை தீர்க்கும் சேப்பழங்கிழங்கு.. சேனை இலையை விட்றாதீங்க
சென்னை: வழவழப்பு தன்மை கொண்ட சேப்பங்கிழங்கை யாரெல்லாம் சாப்பிடலாம், யாருக்கெல்லாம் இந்த கிழங்கு நல்லது தெரியுமா?
சேப்பங்கிழங்குகளில் பெரிதும் இருப்பது கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள்தான்.. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தை தருகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள கிழங்கு என்பதால், செரிமான கோளாறுகளை நீக்கி, குடல் புண்களையும் ஆற்றுகிறது.

நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது. சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E உள்ளதால், சருமத்தில் உள்ள காயங்களையும் விரைவில் குணமாக்கிவிடுகிறது..
கண் புரைகள்: சேப்பங்கிழங்கில் உள்ள வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் நிறைந்துள்ளது, ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது.. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் பெற முடிகிறது. பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நெருங்குவதில்லை.. அதேபோல, பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராகவும் இந்த கிழங்கு பாதுகாப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
ஆனால், இந்த கிழங்கை நன்றாக வேகவைத்து, கட்டாயம், புளியையும் சேர்த்துதான் சமைக்க வேண்டும்.. அல்லது எலுமிச்சம் பழம் பயன்படுத்தியும் சமைக்கலாம்... சேப்பங்கிழங்கை நன்றாக காயவைத்து, அல்லது சில நாட்கள் கழித்து சமையலுக்கு பயன்படுத்தினால் அரிப்புத்தன்மையை தவிர்க்கலாம் -
வயிற்றுப்பூச்சி: வயிற்றுப்பூச்சி தொல்லையை போக்கக்கூடிய சேப்பங்கிழங்குகள்,குழந்தைகளுக்கு அரிப்பு அலர்ஜி போன்றவைகளுக்கும் மருந்தாகிறது.. ஆனால், 2 வயதுக்கு பிறகே குழந்தைகளுக்கு தர வேண்டுமாம்
சேப்பங்கிழங்கை பொறுத்தவரை, கிழங்கு மட்டுமல்ல, இதன் தண்டு, இலைகள்கூட மருத்துவ குணம் நிறைந்தவை.. ஆனால், இதனை புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிடக்கூடாது என்பார்கள்.. தேவைப்பட்டால் புளிக்குழம்பு செய்யும்போது, இந்த தண்டினை சேர்த்து கொள்ளலாம்.. பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுப்பதில், இந்த சேப்பங்கிழங்கு இலையின் பங்கு அதிகம் என்கிறார்கள்.
உடல் எடை: இந்த இலையின் சாறுகள் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு மருந்தாகிறது.. சேப்பங்கிழங்கு இலைச்சாறு குடித்து வருவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென அதிகரிக்கவும் செய்யாது.. அதேபோல, எடையை குறைக்க நினைப்பவர்களும், நார்ச்சத்து நிறைந்த இந்த சேப்பங்கிழங்கு கீரையை சமையலில் சேர்த்து கொள்ளலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications