காரல் மீன்கள்.. புரோட்டீன் நிறைந்த பெஸ்ட் காராப்பொடி மீன்.. தாய்மார்கள் தவறவிட கூடாத காரா மீன்கள்
சென்னை: அதிக டிமாண்டு உள்ள மீன்களில் ஒன்று காரல் மீன்.. இந்த மீனின் மருத்துவ குணம் என்னென்ன தெரியுமா? தாய்மார்கள் இந்த மீனை தவறவிடக்கூடாது என்று சொல்லக்காரணம் என்ன தெரியுமா?
இறைச்சி வகையிலேயே அதிக சத்துள்ளதாக கருதப்படுவது மீன்கள்.. கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ள மற்ற இறைச்சியை காட்டிலும் மீன் ஒரு பெஸ்ட் உணவு என்பதை மறுக்க முடியாது.. அதேபோல, கலப்படம் இல்லாத அசைவ உணவு என்றால் அதுவும் மீன்களாகவே இருக்க முடியும்.

பெரும்பாலான மீன்களில் வைட்டமின் சத்துக்கள் மற்றும் ஒமேகா - 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. இதுபோன்று ஒவ்வொரு மீன்களுக்கும் பலவித ஊட்டத்துக்கள் உள்ளன.. அதில் முக்கியமானதுதான் காரா மீன்கள் எனப்படும் காரல் மீன்கள்...
ஆங்கிலத்தில் Pony fish, Silver belly fish என்று அழைக்கப்படும் இந்த காரல் மீன்களை, பலரும் பேச்சு வாக்கில் காரப்பொடி மீன்கள என்றே சொல்வார்கள்.. பார்ப்பதற்கு சிறியதாக காணப்படுவதால் இதனை பொடி மீன் அல்லது பூச்சி மீன்கள் என்றும் அழைப்பார்கள்...
வரவேற்பு: பெரும்பாலும் இந்த மீன்கள் ராமேஸ்வரம் கடற்பகுதியில் காணப்படும்.. இதனால் ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் பிடிப்படும் இங்கு பிடிக்கப்படும் காரல் மீன்களுக்கு தமிழக மீன் சந்தைகளில் மிகப்பெரிய வரவேற்பு அதிகம் உண்டு. இதுவொரு சீசன் மீன் இனமாகும். குறிப்பிட்ட காலத்தில் ராமேசுவரத்தில் இந்த மீனுக்கான டிமாண்டு கூடிவிடும்.
ஆனால், அனைத்து நாட்களிலும் இதன் சிறிய வகை காரல் மீன்கள் கரைப்பகுதிகளிலும், பெரிய வகை காரல் மீன்கள் ஆழ்கடல் பகுதிகளிலும் அதிகமாக காணப்படும். இந்த மீனில் நிறைய வகைகள உள்ளன.. ஒரு முள் மட்டுமே காணப்படும் ஒத்தமுள் காரல் மீன் என்பார்கள்.. இது பெரும்பாலும் ராமேஸ்வர கடற்பகுதிகளில் மட்டுமே கிடைக்கக்கூடியது.
மீனின் வகைகள்: அதேபோல, வாய்ப்பகுதி ஊசியாக இருப்பதால் ஒரு வாய்க் காரல் மீன், பொட்டு போல குட்டியாக இருந்தால், அதற்கு பொட்டுக் காரல் மீன், மீனின் மீது மஞ்சள் கோடு காணப்படுவதால் மஞ்சள் காரல், வட்ட வடிவத்தில் காணப்படுவதால் வட்டக் காரல் மீன், மீனின் மேற்பகுதியில் வரிகள் காணப்படுவதால் வரிக்காரல் மீன், இரவில் வெளிச்சதை உமிழும் வௌக்கு காரல் மீன், குதிப்பு காரல் மீன், நெடுங்காரல் மீன் என்று மொத்தம் 9 வகையான காரல் மீன்களை ராமேஸ்வர மீனவர்கள் பிடிக்கிறார்கள்.
இந்த மீனின் ஸ்பெஷல் என்னவென்றால், வெளிப்புறத்தில் செதில் இல்லாமல் உப்புப்படிமம் அதிகம் இருக்கும்.. இந்தவகை மீன்கள் எப்போதுமே கடற்பாசிகளை மட்டும் உணவாக சாப்பிட்டு வாழக்கூடியவை..
காரல் மீன்கள்: இந்த காரல் மீன்கள் முழுக்க முழுக்க மருத்துவக்குணங்கள் நிறைந்தவை.. வைட்டமின் D, வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் இந்த மீனில் உள்ளன. புரோட்டின், நியூட்ரியன்கள் போன்ற சத்துக்களும் உள்ளதால், இதயநோய்கள் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது... அத்துடன் நோய் எதிர்ப்பு திறனை வலுப்படுத்தவும், மூளை வளர்ச்சிக்கும் சிறந்த உணவாகவும் திகழ்கிறது.
தாய்ப்பால் அதிகம் சுரக்க இந்த காரல் மீனை தாய்மார்களுக்கு சாப்பிட தருவார்கள்.. கர்ப்பக்காலத்திலும், குழந்தை பிறந்த பிறகும், தாய்ப்பால் ஊறவும் பாரம்பரியமாக சமைத்துக் கொடுக்கப்படுவது இந்த காரல் மீன்கள்தான்..
கடற்பாசிகள்: கடற்பாசிகளை அதிகம் உண்டு வாழும் காரணத்தினால், காரல் மீன்களுக்கு தாய்ப்பால் அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் அதிகரித்துள்ளது.. ஆனால், தாய்மார்களுக்கு இதை கொடுப்பதானால், சிறிய அளவிலான காரல் மீன்களைத்தான் தரவேண்டுமாம்.. காரணம், சதைப்பற்றுள்ள பெரிய அளவிலான காரல் மீனில் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும் என்பதால், அதை சமைத்துதர தரக்கூடாது.. எனவே, காரப்பொடி மீன்கள்தான் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமானது.
குறிப்பாக காரல் மீன்களில் ராமகாரல் என்ற குதிப்பு காரல் மீன்கள் உள்ளன.. இந்த ராம காரல் மீனில்தான் தாய்ப்பால் சுரக்கும் அதிக சத்துக்கள் உள்ளதாக சொல்வார்கள்.
அவியல், கருவாடு: இந்த காரல் மீனை அவித்து, அதிலிருந்து ஜூஸ் எடுத்து குடிக்க தருவார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதில் ரசம், சொதி, குழம்பு, அவியல், பொறித்து சாப்பிடுவது இன்றும் நடைமுறையில் உள்ளது.. கருவாடுகள் என்றாலும், காரல் கருவாடுகளையே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.. குறைந்த விலையில் அதிக மருத்துவகுணம் வாய்ந்த மீனாக இந்த காரல் மீன் திகழ்வதால்தான், இந்த மீனுக்கு எப்போதுமே டிமாண்டு கூடியபடியே உள்ளது.












Click it and Unblock the Notifications