தேங்காய் பூவால் ஏற்படும் நன்மைகள் என்ன? உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் பூ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேங்காய் பூ சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம். தைராய்டு பாதிப்பால் அவதியுடையவர்கள் தேங்காய் பூ சாப்பிட்டால் அந்த பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.

இதுகுறித்து தீபா தங்கராசு என்பவர் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேங்காய் பூ சாப்பிடுவதால் என்ன பயன்கள் தெரியுமா? தேங்காய்ப்பூ என்பது என்னவென்று சிலருக்கு குழப்பம் இருக்கும். முற்றிய தேங்காயில் உண்டாகும் கரு வளர்ச்சியே தேங்காய்ப்பூ ஆகும்.

health coconut flower

பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய்ப்பூ கொடுக்கும். தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தேங்காய்ப் பூவை சாப்பிடுவதால் தைராய்டு சுரப்பை குணப்படுத்தலாம்.

தேங்காய்ப் பூ உண்பதால் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைக்கவும் முடிகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கவும் முடியும்.

புற்றுநோய் செல்களைத் தூண்டுகிற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றலைக் கொண்டது தேங்காய்ப்பூ.

தேங்காய்ப்பூவில் தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதைவிட அதிக சத்துக்கள் இருக்கிறது. தேங்காய்ப்பூவில் மிக அதிகமான ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும்.

தேங்காய்ப்பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்த இயலுகிறது. ஜீரணசக்தி குறைவாக இருந்தால் தேங்காய்ப்பூ சிறந்த மருத்துவமாகும். இதிலுள்ள மினரல், வைட்டமின் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.

தேங்காய்ப்பூவில் முக்கியமாக முதுமையைத் தடுக்கும் ஆன்டிஆக்ஸிடெட் நிறைய உள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சருமதொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது.

சிறுநீரக பாதிப்பை_குறைக்கும் திறன் தேங்காய்ப் பூவுக்கு உண்டு. மேலும் சிறுநீரகத் தொற்றுநோய்களையும் குணப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை தேங்காய் பூவினால் பெறலாம். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+