Sea Buck Thorn: லடாக்கில் விளையும் இமயமலை தங்கம்! மோடி சொன்ன சீக் பக் தார்ன்! பயன்கள் என்ன?
சென்னை: ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் உள்ளிட்டவைகளை தடுக்க சிறிய ஆரஞ்ச் நிற சீ பக் தார்ன் (Sea Buck Thorn) பழங்களின் நன்மைகள் என்ன என்பதை காணலாம்.
75 வயதிலும் சுறுசுறுப்பாக பணியாற்றும் நபர்களின் ஆற்றலுக்கு முக்கிய காரணம் 'சீ பக் தார்ன்' (Sea Buckthorn) பழம் ஆகும். லடாக்கின் குளிர்ந்த பாலைவனப் பகுதிகளில் வளரும் இந்தப் பழம், 'இமயமலைத் தங்கம்' அல்லது 'அற்புதப் பெர்ரி' என்று அழைக்கப்படுகிறது.

சிறிய ஆரஞ்சு நிறப் பழமான சீ பக் தார்ன், மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் கடுங்குளிரிலும் வளரும் தன்மை கொண்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திபெத்திய மருத்துவத்தில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), எல்லைப் பகுதியில் உள்ள வீரர்களுக்கான பழச்சாறுகள் மற்றும் துணைப் பொருட்களில் இதைச் சேர்க்குமாறு பரிந்துரைக்கிறது.
சீ பக் தார்ன் பழம் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. எலுமிச்சையை விட 12 மடங்கு அதிக வைட்டமின் 'சி'யுடன், வைட்டமின் 'ஏ', 'ஈ' மற்றும் அரிய ஒமேகா கொழுப்பு அமிலங்களான (3, 6, 7, 9) ஆகியவை இதில் நிறைந்துள்ளன.
இது நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், இதில் உள்ள முதுமையைத் தடுக்கும் பண்புகள் சருமச் சுருக்கங்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் உதவுகின்றன.
பிரதமர் மோடி எப்போதும் உள்நாட்டுப் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். லடாக் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன், குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கும் இந்தப் பழத்தை அவர் 'சூப்பர் ஃபுட்' (Superfood) என்று பாராட்டுகிறார்.
"வெளிநாட்டு மல்டிவைட்டமின் மாத்திரைகளை விட, நம் நாட்டிலேயே கிடைக்கும் இயற்கை பழங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" என்று அவர் வலியுறுத்துகிறார். இந்த பழங்கள் காயங்களை ஆற்றவும், தோல் அழற்சி, முகப்பரு, சுருக்கங்களை குறைக்கவும் பயன்படுகிறது.
அது போல் இது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது. கல்லீரலைப் பாதுகாக்கிறது. இந்த பழங்கள் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்கிறது.
தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. அழற்சியை குறைக்கும் பீனாலிக் அமிலங்கள் இந்த சீ பக் தார்னில் உள்ளன. இதயத்தை பாதுகாக்கிறது. இதில் ஓமேகா கொழுப்பு இருக்கிறது. ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது அருமருந்தாக அமைகிறது. வறண்ட கண்கள், வயோதிகத்தால் பார்வை குறைபாடு போன்றவைகளுக்கு இந்த பழங்களும் எண்ணெய்களும் மருந்தாக பயன்படுகிறது.
அது போல் பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது. அதாவது வெள்ளைபடுதல், அதிக துர்நாற்றத்துடன் பிறப்புறுப்பில் இருந்து நீர் வெளியாதல், தொற்று, வலி, சிறுநீர் கழிக்க கஷ்டப்படுதல் போன்ற பிரச்சினைகளை இது தடுக்கிறது.
குடல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கும் இது அருமருந்தாகிறது. இதில் உள்ள பாலி சாக்கிரைட்ஸ் கல்லீரலை பாதுகாக்கிறது. இந்த பழங்கள் பல்ப்பாகவும் கிடைக்கின்றன. இதை 3 எம்எல் எடுத்து ஒரு டம்ளரில் கலந்து குடிக்க வேண்டும். லேசான புளிப்பு சுவையை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
