பருப்பு கீரை செய்றீங்களா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.. "அந்த" பிரச்சனை தீர்க்கும் பருப்பு கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் அன்றாடம் வீடுகளில் சமைத்து சாப்பிடக்கூடிய கீரைகளில் மிக முக்கியமானது பருப்புக்கீரை.. இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொண்டாலே, கீரையின் நன்மைகள் தானாகவே நமக்கு தெரிந்துவிடும்.

100 கிராம் பருப்பு கீரையில், 90.5 கி.நீர்ச்சத்தும், 2.4 கி. புரதமும், 0.6 கி கொழுப்பும், 2.3 கி. தாது உப்புகளும், 1.3 கி. நார்ச்சத்தும், 2.9 கி சர்க்கரைச்சத்தும், 111 மி.கி. சுண்ணாம்புச்சத்தும், 45 மி.கி. பாஸ்பரஸும், 14.8 மி.கி. இரும்பு சத்தும், 2292 மி.கி. மாவுப்பொருளும், 0.10 மி.கி. தையாமினும், 0.22 மி.கி. ரிபோஃபிளேவினும், 0.7 மி.கி. நியாசினும், 29 மி.கி. வைட்டமின் C, 27 கலோரியும் நிறைந்துள்ளன என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

Health Benefits of Paruppu Keerai and what are the Excellent Uses of Paruppu Keerai

கொழுப்பு சத்து: அத்துடன், மீன்களில் உள்ளதைபோலவே, ஒமேகா 3 சத்துக்கள் இந்த கீரையில் உள்ளது.. A, C, B காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளதால், நுரையீரல் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.. இந்த கீரை உடலிலுள்ள கொழுப்புக்களை குறைக்கக்கூடியது.. பருப்புக் கீரை வயிற்று கிருமிகளை அழிக்கும்.

இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் கோடை காலங்களில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. கல்லீரல் நோய்கள் தீரும். கால்சியம் சத்து குறைவாக இருப்பவர்களும், இரும்புச்சத்து குறைவாக இருப்பவர்களும், இந்த கீரையை தவறாமல் சாப்பிட்டு வர வேண்டும். வழக்கமாக கீரை சாப்பிட்டாலே மலச்சிக்கல் நீங்கும் என்றாலும், இந்த பருப்புக்கீரை குடற்புழுக்களை அறவே நீக்குகிறது.

பெண்களுக்கு குறிப்பாக, பாலுட்டும் தாய்மார்களுக்கு மிகச்சிறந்த உணவாக இந்த கீரை உள்ளது.. அதேபோல, மாதவிடாய் கோளாறுகள் குணமாகும். இந்த கீரை பித்தத்தை நீக்கக்கூடியது.. பித்தம் காரணமாக தலைசுற்றல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த கீரையை வாரம் 2, 3 முறையாவது சாப்பிட்டு வரலாம்.

எப்படி பயன்படுத்தலாம்: வழக்கமாக, இந்த கீரையில் கடையல், மசியல் செய்வார்கள். ஆனால், எப்போது பருப்புக்கீரை கடைசல் செய்தாலும், நிறைய பூண்டு சேர்த்து செய்ய வேண்டும். இதனால் கெட்ட கொழுப்புக்கள் நீங்கும்..

சரும பிரச்சனைகள்: அதேசமயம், புறப்பயன்பாடுகளுக்கும் இந்த கீரையை பயன்படுத்தலாம்.. அதாவது, தலைவலி உள்ளவர்கள், இந்த பருப்பு கீரையை பேஸ்ட் போல அரைத்து பற்று போட்டால், தலைவலி நீங்கும்.. அதேபோல, சரும பிரச்சனைகளான, புண்கள், அலர்ஜி, வியர்வை பருக்கள், கொப்பளங்கள், தீக்காயங்கள் போன்றவைகளுக்கு இந்த கீரையின் பசையை தடவி வரலாம்.

இந்த கீரையின் விதைகளும் மருந்தாகக்கூடியது.. இதன் தண்டுகளும் மருந்தாகக்கூடியவை.. இந்த பருப்புக்கீரை தண்டை அரைத்து கை, கால் எரிச்சலுக்கு தடவினால், குணம் பெறலாம்.. இதன் விதைகளை 4 கிராம் மட்டுமே எடுத்து, அதை கழுவி இளநீரில் கலந்து குடித்தால், வயிற்று எரிச்சல், சீதபேதி நிற்கும். இந்த பருப்பு கீரையுடன், கீழாநெல்லி கீரையும் சமமாக எடுத்து, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், கல்லீரல் வீக்கம் குறையும்.

உண்ணக் கூடாதவர்கள்: சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள், நிறைய மிளகு அதிக அளவு சேர்த்து சாப்பிட வேண்டும்.. இந்த கீரையின் விதைகளும் மருந்தாகக்கூடியது.. இதன் தண்டுகளும் மருந்தாகக்கூடியவை.. இந்த பருப்புக்கீரை தண்டை அரைத்து கை, கால் எரிச்சலுக்கு தடவினால், குணம் பெறலாம்..

Health Benefits of Paruppu Keerai and what are the Excellent Uses of Paruppu Keerai

இதன் விதைகளை 4 கிராம் மட்டுமே எடுத்து, அதை கழுவி இளநீரில் கலந்து குடித்தால், வயிற்று எரிச்சல், சீதபேதி நிற்கும். இந்த பருப்பு கீரையுடன், கீழாநெல்லி கீரையும் சமமாக எடுத்து, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், கல்லீரல் வீக்கம் குறையும்.

சிலர் இந்த கீரையை நூடுல்ஸில் பயன்படுத்துவார்கள்.. சிலர் இதை அடை போல செய்வார்கள்.. அதாவது, சம்பா கோதுமையைக் கழுவி இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் பச்சரிசியை தனியே ஊறவைத்து கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக ஊறிய பிறகு முளைகட்டிய பச்சைப் பயறு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ள வேண்டும்.

கீரை அடை: இந்த மாவுடன், நறுக்கிய பருப்பு கீரை, சின்ன வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பிறகு, வாழையிலையில் தட்டி, அடை போல சுட்டு எடுத்தால், சத்தான கீரை அடை ரெடி.

இப்படி பல நன்மைகளை இந்த கீரை தந்தாலும், இதிலுள்ள ஆக்சாலிக் அமிலம் சிறுநீரகக்கற்கள் உருவாக காரணமாகலாம். அதனால், சிறுநீரகக் கல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பருப்புக் கீரையைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+