பூசணிக்காய்.. குண்டா இருக்கீங்களா.. அப்ப "இதை" மட்டும் சாப்பிடுங்க.. ஆயுளை நீட்டிக்கும் பூசணி விதைகள்
சென்னை: பூசணி என்பது பழமாகும்.. ஆனால், நாம் அதனை, காய்கள் என்றே சொல்கிறோம்.. பூசணிக்காய்களில் வகைகள் உண்டு.. மஞ்சள் பூசணி, வெண்பூசணி என்கிறோம்.. இதில் வெள்ளை பூசணி மற்றும் பூசணி விதைகள் பற்றி பார்ப்போம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெள்ளை பூசணிக்காயை பயன்படுத்த வேண்டும்.. இதில், நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால், உடல் பயிற்சி செய்துவிட்டு, இந்த பூசணிக்காயை சாப்பிடலாம்.

உடல் எடை: வெள்ளை பூசணியில் உள்ள தோல்கள், விதைகளை நீக்கிவிட்டு, அதில் உள்ள சதைகளை மட்டும் சின்ன சின்ன துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.. ஒரு கிண்ணம் அளவுக்கு இப்படி எடுத்துக்கொண்டு, மிக்ஸியில் அரைக்க வேண்டும்.. ஒரு டம்ளர் அளவுக்கு கிடைக்கும் ஜூஸை அப்படியே குடித்துவிட வேண்டும்.. வெறும் வயிற்றில் இப்படி குடித்துவந்தால், உடலில் உள்ள ஊளை சதைகள் காணாமல் போகும்..
அதுமட்டுமல்ல, இந்த வெள்ளைப் பூசணி சாறு, புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சிகள் கண்டுபிடித்துள்ளன. இந்த வெள்ளை பூசணி புண்களை ஆற்றக்கூடியது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.. இருமல், ஜலதோஷம், காய்ச்சலை விரட்டக்கூடியது. இதுஒரு சிறந்த ரத்தம் சுத்திகரிப்பாகும்..
வெண்பூசணி: பெண்களுக்கு மிகவும் நல்லது.. வெள்ளைப்படுதலை நீக்க, இந்த வெண்பூசணி கைகொடுக்கும்... குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும்.
அதேபோல பூசணி விதைகளை எடுத்துக்கொண்டால், அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன என்பதை மறக்கக்கூடாது.. இந்த விதையில், நார்ச்சத்து, புரோட்டீன், இரும்புச்சத்து, வைட்டமின் இ, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.. அதாவது 100 கிராம் பூசணி விதைகளில், 600 கலோரிகள் உள்ளதாம்.
ஒரு கப் பூசணி விதைகளை சாப்பிட்டால், அன்றைய நநாள் முழுவதும் சுறுசுறுப்பான ஆற்றல் கிடைக்கும்.. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை தடுக்க உதவும்.
துத்தநாக தாதுசத்து: நம்முடைய உடம்பில், துத்தநாக தாதுசத்து குறைவாக இருப்பதால்தான், சளி, காய்ச்சல், மனஅழுத்தம், இதெல்லாம் ஏற்படுகிறது. பூசணி விதையில் துத்தநாகம் நிறைய உள்ளதால், செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.. ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் உள்ளதால், இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து, சர்க்கரைநோயையும் வராமல் தடுக்கிறது.
எப்படி சாப்பிடலாம்: இந்த விதைகளுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து, சிலர் கஷாயம் போல செய்து குடிப்பார்கள்.. ஆனால் பெரும்பாலும், இந்த விதைகளை காயவைத்து, பொடி செய்து எடுத்து வைத்துக்கொண்டால், பல தீர்வுகளுக்கு பயன்படுத்தலாம்.. உதாரணமாக, இந்த பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலு பெறும்..
அல்லது இந்த விதைகளை நெய்யில் வறுத்தும் சாப்பிடுவார்கள்.. இப்படி சாப்பிட்டால், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். இந்த பொடியை பாலில் கலந்து குடித்தால், ஆண்களுக்கு மிகவும் நல்லது.. ஆண்மைத் தன்மையை அதிகரிக்க செய்து, விந்தணுக்களின் திறனையும் அதிகரிக்கும்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications