Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசி "கறிவேப்பிலை"தான்.. ஓரங்கட்டாதீங்க ப்ளீஸ்.. டாக்டர்களே திகைச்சு போய் சொல்றாங்க.. "அதிசய இலைகள்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: காசு கொடுத்து வாங்கி வரும் காய்கறிகளில், இலவசமாக ஒட்டிக் கொண்டு வரும், கறிவேப்பிலையில்தான் எத்துணை எத்துணை மகிமைகள்.. இலவசங்கள் என்றாலே, அதற்கு நம்ம ஊரில் மதிப்பு குறைவுதானே?

கறிவேப்பிலையை சமையலுக்கு ஒரு மூலப்பொருளாக மட்டுமல்லாமல், நம்முடைய ஆரோக்கியத்திற்கும் நிறைய வழிகளில் பயன்படுத்தலாம்.. கறிவேப்பிலையின் மகத்துவம் அந்த அளவுக்கு முக்கியம் வாய்ந்தது.

கறிவேப்பிலை: கறிவேப்பிலையில் இரும்பு சத்து இருக்கிறது என்று தெரியும்.. கறிவேப்பிலை சாப்பிடுவதால், தலைமுடி நன்றாக வளரும் என்று தெரியும்.. ஆனால், இவைகள் அனைத்தையும், ஏராளமான மருத்துவ குணம் இந்த கறிவேப்பிலையில் உள்ளது. அதனால்தான், சித்த மருத்துவத்தில், கறிவேப்பிலை தவிர்க்க முடியாத மருந்தாகி உள்ளது.

health news and do you know what are the health benefits of curry leaves

கறிவேப்பிலையில், கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், விட்டமின்கள் போன்றவை உள்ளடங்கி இருக்கிறது.. இதன்காரணமாக, இருதய செயல்பாட்டிற்கு அதிகமாகவே உதவுகிறது.

நோய்கள்: கறிவேப்பிலையில் கார்பஸோல் (Carbazole) ஆல்கலாய்டுகள் போன்றவை அடங்கி உள்ளன.. இவை நம்முடைய உடலில் செல்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் ஃப்ரீ- ரேடிக்கல்களை அழித்து, நோய்களை தங்காமல் கவனித்து கொள்ளும்.. பீட்டா கரோட்டீன்கள் அடங்கி உள்ளன.. வைட்டமின் - சி நிறைய இருக்கிறது.

அதேபோல, நோய் எதிர்ப்பு சக்தியாகவும் திகழ்கிறது... தலைமுடி ஆரோக்கியமாக வளர்வதுடன், தோலின் நிறத்தையும் பொலிவுடன் வைத்திருக்க கறிவேப்பிலை உதவுகிறது. இளநரையை தடுப்பதில் கறிவேப்பிலைக்கு இணை வேறு கிடையாது.. கறிவேப்பிலையை அடிக்கடி பயன்படுத்தினால் உடலில் தேவையற்ற கொழுப்பும் சேராது... உடலுக்குத் தேவையான தாதுப்பொருள்களும், வைட்டமின்களும் கறிவேப்பிலையில் அதிகமாகவே இருக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள்: கறிவேப்பிலை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால், சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம்தான் இந்த கறிவேப்பிலை. கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்..

பசி மருந்து: இந்த கறிவேப்பிலை இலைகள், பசியை தூண்டக்கூடியது.. இலைகளை உலரவைத்து, அரைத்து பொடியாக்கி, இவைகளுடன் சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வைத்து கொள்ளவேண்டும்.. தினமும், சாப்பாட்டில் இந்த பொடியை நல்லெண்ணையுடன் கலந்து ஒருவேளையாவது பிசைந்து சாப்பிட்டால், நல்ல பசியுண்டாகும்..

health news and do you know what are the health benefits of curry leaves

கர்ப்பிணிகள்: கர்ப்பிணிகளுக்கு கறிவேப்பிலை போல சிறந்த நன்மை வேறு இல்லை.. கர்ப்ப காலத்தின் முதல் 3 மாதங்களில், வாந்தி வரும்.. பசியின்மை, தலைசுற்றல் இருக்கும்.. செரிமான தொந்தரவும் நிறைய வரும்.. அப்போது, கறிவேப்பிலை பொடியை சாதத்தில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பிணிகளுக்கு ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் தொந்தரவுகள் எல்லாம் காணாமல் போய்விடும். ரத்த உற்பத்தியும் விரைவாக அதிகரிக்கும்.. அதேபோல, மாணவர்களுக்கு நினைவுத்திறன் அதிகரிக்க வேண்டுமானால், கறிவேப்பிலையை உணவில் ஒதுக்கி வைக்கக்கூடாது.

வாந்தி வருதா: மலைப்பிரதேசங்களில் பயணம் செய்ய நேர்ந்தால், சிலருக்கு வாந்தி வருவது போல உணர்வு வரும்.. சிலருக்கு, கொண்டைஊசி வளைவுகளில் செல்லும்போது, வாந்தியே வந்துவிடும்.. அதுபோன்ற பயணங்களின்போது, கறிவேப்பிலை + எலுமிச்சை இரண்டையும் சேர்த்து முகர்ந்து பார்த்தால், வாந்தி உணர்வு மறைந்துவிடும்.. கறிவேப்பிலை பொடியையும் தண்ணீரில் கலந்து குடித்தால், வாந்தி உணர்வு நிற்கும்..

நமக்கு வேண்டாம் என்று, தட்டில் ஒதுக்கிவைக்கப்படும் இந்த கறிவேப்பிலையை வைத்துதான், மருத்துவ ஆய்வுகள் இன்னமும் நடந்து கொண்டேயிருக்கின்றன.. பிள்ளைகள் இனியாவது கறிவேப்பிலையை தூரப்போட்டுவிட வேண்டாம் ப்ளீஸ்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+