Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அஞ்சறைப்பெட்டி".. ஐந்து + அறை + பெட்டி..மசாலா வாசனையும், மகாலட்சுமியின் வாசமும்.. மறந்தே போயிட்டோமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டிலேயே மருந்துகளை வைத்துக்கொண்டு, டாக்டர்களிடம் ஓடிக்கொண்டிருக்கிறோம்.. அதுவும் இளைய தலைமுறைக்கு அவ்வளவாக தெரியாத பொருளாகிவிட்டது, இந்த அஞ்சறைப்பெட்டி..!!

முன்பெல்லாம் இந்த அஞ்சறைப்பெட்டியை தடுப்பு மருந்தாகவும், முதலுதவிப் பெட்டியாகவும் உபயோகப்படுத்தி நலம் பேணும் பழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்திருக்கிறது. பெண்ணை கல்யாணம் செய்து தரும்போது, இந்த அஞ்சறைப்பெட்டிகளை கட்டாயம் சீர்வரிசையில் சேர்த்து தருவார்களாம்.

சில்வர், பிளாஸ்டிக்: பல்வேறு மருத்துவ குணமுள்ள வேதிப்பொருட்களின் கலவையை இந்த பெட்டிக்குள் குறையாமல் வைத்து பராமரித்து வந்தனர். இப்போதிருப்பதை போலல்லாமல், அந்தக் காலங்களில் பெரிய சைஸில், மரத்தினால் செய்யப்பட்ட அஞ்சறைப்பெட்டி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.. இதனால் பொருட்கள் நீண்ட காலத்துக்கு கெடாமல் இருக்கும்.. எந்த பொருளையும் தீர தீர வாங்கி வைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.. இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது..
மகாலட்சுமி: எந்த வீட்டில் அஞ்சறைப்பெட்டி நிறைவாக உள்ளதோ, அந்த வீட்டில் மகாலட்சுமியும் நிறைந்து இருப்பாள் என்று பெரியவர்கள் சொல்வார்களாம்.. அதாவது, வாசனை மிகுந்த பொருட்கள் இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்று ஆன்மீகத்திலும் சொல்வார்கள். இதுஒருபக்கம் இருந்தாலும், அம்மாக்களின் "சில்லறை சேமிப்பு" வங்கியாகவும் இந்த அஞ்சறைப்பெட்டி இருந்திருக்கிறது..

health news and Do you know what is Anjaraipetti, what are the health benefits

வீட்டில் உள்ள பெண்களிடம் காசு வேண்டும் என்று கேட்டால் போதும், இல்லை என்று சொல்லாமல், இந்த டப்பாவைதான் முதலில் கையில் எடுப்பார்கள்.. கையில் காசு இல்லாமல் நின்றோருக்கெல்லாம் முதலுதவி பெட்டியே இதுவாகத்தான் இருந்திருக்கிறது. அஞ்சறை பெட்டியில்தான் அம்மா காசு வைப்பாள் என்றாலும், யாருக்கும் தெரியாமல் சேமித்து வைக்கப்படும் இடம் என்றே கருதப்பட்டது..

அனைத்தையும்விட முக்கியமாக, சமையலறையை அலங்கரிக்கக்கூடிய மருத்துவப்பெட்டி அல்லது நோயில்லா வாழ்வியல் முறையை பின்பற்ற வைத்திருந்த மருந்துப்பெட்டி என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தியாவசிய மளிகைப் பொருட்களை ஒரே இடத்தில் வைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. சீரகம், சோம்பு, மிளகு, மஞ்சள், வெந்தயம், கடுகு, தனியா, பெருங்காயம், லவங்கப்பட்டை, கிராம்பு போன்ற மருந்துகளை இந்த அஞ்சறை பெட்டிக்குள் வைக்கப்படும்..

செலவுப்பெட்டி: கோயம்புத்தூர் வட்டாரமொழி வழக்கில் இது செலவுப் பெட்டி என அழைக்கப்படுகிறது. இந்த 5 பொருட்களின் பயன்களை, லிஸ்ட் போட்டு, எளிதில் சொல்லிவிட முடியாது.. அவ்வளவும் மருத்துவம்... ஐந்து + அறை + பெட்டி = அஞ்சறைப்பெட்டி..
சீரகம்: சீரகத்தில் வைட்டமின்-பி, இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம் போன்ற சத்துகள் நிரம்பியவை.. சீரகம் என்பது சீர்+அகம் = சீரகம் அகத்தை சீர்படுத்துவதால் இதற்கு சீரகம் என்று பெயர் வந்தது. அதாவது நம் உடலில் வயிற்றில் உள்ள வாயுக்களை களைவதில் முக்கிய பங்கு சீரகத்துக்கு உண்டு. சீரகத்தில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது செரிமான அமைப்பை மேம்படுத்தும்.. குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும்.. சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடலின் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும்.. இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்... உடல் எடை குறையும்.

மிளகு: வைட்டமின்- பி, ஈ மற்றும் பைப்பரின் போன்ற சத்துக்களை உடையது.. நம்முடைய உடலில் உள்ள வாத, பித்தம், கபம் என்று சொல்லக்கூடிய மூன்று கூறுகளையும் சமநிலையில் வைக்க உதவுகிறது. மிளகு உடலில் உள்ள நச்சுக்களை முறியடிக்கிறது.. சளி, இருமல், காய்ச்சலுக்குக் காரணமான தொற்றுகளை நீக்கவும் உதவும்., தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தைக் குறைக்கும்..

மஞ்சள்: வைட்டமின் சி என்கிற ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள பொருளாகும். வைட்டமின் பி அதிகம் உள்ளதால்தான், மஞ்சள் இன்று உலகளவில் வைரஸுக்கு எதிராக செயல்படும் பொருளாக நிரூபிக்கப்பட்டுள்ளது.. சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்கி, புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது...

வெந்தயம்: வெந்தயம் என்பது வெந்த + அயம் என்பதே வெந்தயம் என்று மருவி வந்துள்ளது. தமிழில் அயம் என்ற சொல்லுக்கு இரும்பு என்ற ஒரு பொருள் உண்டு. அதாவது இயற்கையில் நன்கு பக்குவப்படுத்தப்பட்டுள்ள இரும்புச்சத்து வெந்தயத்தில் உள்ளதாம்.. அதனால் நம் உடலுக்கு இரும்பு சத்தினையும், ஹீமோகுளோபின் அளவையும் தக்கவைக்க உதவுகிறது.. ரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகிறது.. சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்... பித்தத்தை போக்கும்.. உடல்சூட்டை குறைக்கும்.. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.. குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், தலைய்க்கு தேய்த்து குளித்து வர, கூந்தலும் அடர்த்தியாக வளரும்.

கடுகு: உடலில் உள்ள நச்சுகளை பன்மடங்கு குறைப்பதால்தான், பெரும்பாலான உணவுகளை கடுகு சேர்த்து தாளிக்கிறோம்.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அழற்சி நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கிறதாம்.. எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும்..

தனியா: கொத்தமல்லி விதை என்று சொல்லக்கூடிய தனியா பித்தத்தை குறைப்பதில் முதன்மையானது.. கல்லீரல் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுவது.. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் இவற்றுக்கு சிறந்த அருமருந்தாகும்.. நீரிழிவு தொந்தரவு இருப்பவர்கள் 10 கிராம் அளவு தனியாவை தண்ணீரில் இரவு ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை அருந்தினால் நீரிழிவு கட்டுப்பாட்டுக்குள் வரும். வாயு, இருமல், மைக்ரேன் தலைவலி, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, பித்தக் கிறுகிறுப்பு, என பல நோய்களை போக்க வல்லது.

health news and Do you know what is Anjaraipetti, what are the health benefits

பெருங்காயம்: இதை மருத்துவ குணங்களால் பெருங்காயம் "கடவுளின் அமிர்தம்" என்பார்கள்.. சிறந்த மலமிளக்கியும்கூட. மூட்டுகளின் சந்துகளில் உள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு இதைவிட சிறந்த மருந்து வேறில்லை.. இது ஒரு பிசின் வகையை சேர்ந்தது என்றாலும், நரம்புகளை பலப்படுத்தக்கூடியது.. பெருங்காயத்தை நீர் விட்டரைத்து மார்பின் மீது பற்றுபோட குழந்தைகளுக்கு உண்டாகும் இருமல் குணமாகும். பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பெருங்காயம் நல்ல தீர்வு..

லவங்கப்பட்டை: லவங்கப் பட்டை, மன அபத்தம், மன இறுக்கம், பதட்டம் போன்றவற்றை அமைதிப்படுத்தும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை கட்டுப்படுத்தும்.. ரத்த அழுத்தத்தை குறைக்கும். இலவங்கத்தைச் சுவைத்தால் பல்வலி குணமாகும்.. வாயை புத்துணர்வுடன் வைத்திருக்கும்.தமனிகளில் இருக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். ஏற்கனவே மாரடைப்பு நோய் வந்தவர்களும் இதை சாப்பிடுவதால் மறுபடி மாரடைப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம்

இப்படியான பொருட்களை, தன்னுள் தேக்கி வைத்திருப்பதுதான், அஞ்சறைப்பெட்டி.. எல்லா நோய்களுக்கும் அடிப்படையான காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான்.. அப்படியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை சரியான முறையில் கையாள நமக்கு உதவியாக இருப்பதே இந்த அஞ்சறைப்பெட்டிகள்தான்.. எவ்வளவுதான் நவநாகரீகம் மாறினாலும், பழமை மாறாத இந்த அஞ்சறைப்பெட்டி, நம்மை பத்திரப்படுத்திக்கொண்டே, நம்முள் சேர்ந்தே பயணித்து வருகிறது இன்னமும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+