மினுமினு பொன்னாங்கண்ணி.. கீரைகளின் ராணி.. பொன்+ஆம்+ காண்+ நீ.. அடேங்கப்பா.. எக்கச்சக்க பலன் போல
சென்னை: பொன்னாங்கண்ணியை "கீரைகளின் ராணி" என்பார்கள்.. ஏன் தெரியுமா? பலவித நோய்களை குணப்படுத்த உதவும் அற்புத உணவாகவும் மூலிகையாகவும் விளங்குவது இந்த கீரைதான்.
நம்முடைய உடலுக்கு, பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடிதால்தான், இதற்கு பொன்னாங்கண்ணி என்று பெயர்.. என்று கூறினார்கள். பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங்கண்ணி... பொன்னாங்காணி என்பதே தூய தமிழ்ச்சொல்.
சத்துக்கள்: பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.. காச நோய், இருமல், கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய சிறந்த அருமருந்தாக இந்த கீரை பயன்படுகிறது.. வயிற்று புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது... ரத்த சுத்திகரிப்பாகவும் இது விளங்குகிறது. வாய் துர்நாற்றம் நீங்கும்.. இதயம், மற்றும் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
சருமத்தின் அழகு அதிகரிக்கும். கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.. மெலிந்து காணப்படுபவர்கள், துவரம் பருப்பு, நெய் சேர்த்து பொன்னாங்கண்ணி கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால், எலும்புகள் வலிமையாகி, உடல் எடை அதிகரிக்கும். ஆனால், இந்த கீரையில் உப்பு மற்றும் மிளகு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க உதவும்.

மூலநோய்: மூலத்துக்கு மிகச்சிறந்த உணவு இந்த கீரை.. பொன்னாங்கண்ணியில் இருந்து சாறு எடுத்து, அதே அளவுக்கு கேரட்டையும் கலந்து சிறிது கல் உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால், மூலத்துக்கு நிவாரணமாக இருக்கும்.. அல்லது மிளகு, பூண்டு சேர்த்து மசியலாக்கி சாப்பிட்டாலும் மூலத்துக்கு தீர்வாகும். அல்லது மூல நோய் ரத்தக்கசிவு வந்தால், உடனே 2 டீஸ்பூன் பொன்னாங்கண்ணி சாறும் + முள்ளங்கி சாறும் சம அளவு எடுத்து குடித்து வந்தால் ரத்தப்போக்கு குணமாகும்.
பொன்னாங்கண்ணி இலைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், தலைமுடிக்கு மிகவும் பயன்தரும்.. குளிர்ச்சியை தரும். இதனால் கண்களும் குளிர்ச்சியாகும்.. தலைவலி இருக்கும்போது, பொன்னாங்கண்ணி இலையை கசக்கி நுகர்ந்து பார்த்தாலே தலைவலி ஓடிப்போயிருமாம்..
இளந்தாய்மார்களுக்கு இந்த கீரையை தாராளமாக தரவேண்டும் இதனால், தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்த உதவும்.. இந்த கீரையுடன் செடியின் மென்மையான தண்டுகளை சாப்பிடுவது பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுகிறது..
குளிர்ச்சி: கண்களுக்கு இந்த கீரை மிகவும் நல்லது.. கண் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.. பொன்னாங்கண்ணிக் கீரையை பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால், பகலில் கூட நட்சத்திரங்களை பார்க்கலாம் என்பார்கள்.. அதாவது அந்த அளவுக்கு கண்பார்வை பிரகாசமாக இருக்குமாம்.. ஆனால், இந்த கீரையை பகலில் சமைத்து உண்ண வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications