உடல் உழைப்பு இல்லாட்டி “ரிஸ்க்”.. மாரடைப்புக்கு பகீர் காரணம்! சிகரெட், மதுவை விட ஆபத்தாம் -என்ன அது?
காய்கறி மற்றும் பழங்களை தேவையான அளவு உணவில் எடுத்துக்கொள்ளாத 98.4 சதவீதம் பேருக்கும் இதய நோய்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெல்லி: கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி மது, சிகரெட் பழக்கம் மற்றும் உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கே அதிகளவில் மாரடைப்பு ஏற்படுவதாகவும் மத்திய அரசின் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து இருக்கிறது.
இந்தியாவில் தற்போது மாரடைப்பு காரணமாக முதியவர்கள் தொடங்கி சிறுவதினரும் அதிகளவில் உயிரிழந்து வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மாநிலங்களவையில் சுகாதாரத்துறை அமைச்சகம் மாரடைப்புகளின் காரணம் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வழங்கிய தகவலை வெளியிட்டு உள்ளது.

அதிகரித்த மாரடைப்புகள்
அதன்படி, இந்தியாவில் மொத்தமாக ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவீதம் பேரின் மரணத்துக்கு மாரடைப்பே காரணம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. கடந்த 1990 ஆம் ஆண்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 15.2 சதவீதமாக இருந்து இருப்பதாக ஐசிஎம்ஆர் அறிக்கை தெரிவிக்கிறது.

காய்கறி, பழங்கள்
அதேபோல் எதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுகிறது என ஐசிஎம்ஆர் வழங்கிய தகவலையும் மாநிலங்களவையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தாக்கல் செய்து இருக்கிறது. அதன்படி காய்கறி மற்றும் பழங்களை தேவையான அளவு உணவில் எடுத்துக்கொள்ளாத 98.4 சதவீதம் பேருக்கும் இதய நோய்கள் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிகரெட், மதுவை விட மோசம்
குறிப்பாக கடந்த 2017 - 2018 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகளின் படி, தினமும் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்களில் 32 சதவீதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறதாம். அதேபோல், மது பழக்கும் உள்ளவர்களில் 15.9 சதவீதம் பேருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இவற்றைவிட அதிகமாக மாரடைப்பு ஏற்படும் 41.3 சதவீதம் பேர் போதிய உடல் உழைப்பு இல்லாதவர்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இளைய தலைமுறை
கடந்த சில ஆண்டுகளாகவே இளைய தலைமுறையினர் மத்தியில் இதய நோய்கள் அதிகரித்து வருவது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மாரடைப்பால் மரணம் என்ற செய்தியுடன் திடீர் திடீரென வரும் 20, 30, 40 வயதுகளுக்கு உட்பட்டவர்களின் மரண செய்தியை கேட்கையில் நமக்கும் இதய துடிப்பு எகிறிவிடுகிறது.

இதய பரிசோதனை
அந்த அளவுக்கு தற்போது மாரடைப்பு என்பது வயது வித்தியாசம் இன்றி அனைத்து தரப்பினரையும் அச்சமடைய செய்து வருகிறது. இதய நோய் என்பது நீண்ட காலமாகவே மனித சமுதாயத்தில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் முன்கூட்டியே இதய பரிசோதனை செய்து கொள்வதில்லை என்பதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் நிபுணர்கள்.

எடை பயிற்சி
இதய பரிசோதனை செய்து கொள்ளாமல் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவது, ஜிம்மில் எடை தூக்குவது, டிரெட்மில், கிராஸ் வொர்கவுட் பயிற்சி போன்றவற்றை செய்வதும் இதற்கு ஒரு காரணமாம். உணவு பழக்கங்களை தாண்டி அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் சமயத்திலும் இதய துடிப்பு அதிகரித்து பாதிப்புகள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொழுப்பு
மிக முக்கியமாக புகைபிடித்தல் மற்றும் மது பழக்கத்தை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், சர்க்கரை மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்கள் சாப்பிடுவதை கட்டுப்படுத்தி கொழுப்பின் அளவை கண்காணிக்க வேண்டும் என்கிறார்கள். கொழுப்பை குறைக்க உடல் உழைப்பை செய்ய வேண்டும். அதை செய்யாததால்தான் மாரடைப்பு அதிகம் ஏற்படுவதாக ஐசிஎம்ஆர் தெரிவித்து இருப்பதை இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications