ஆயுள் கூடும்! ஊளைச்சதையை குறைத்து குதிரை தெம்பை கொடுக்கும்.. அசத்தல் அமுக்கிரா கிழங்கு!
சென்னை: அடிக்கடி மறந்து போகிறதா, குழந்தைகள் நன்றாக படித்துவிட்டு தேர்வில் கோட்டை விடுகிறார்களா, அப்போ எடுங்க அந்த அமுக்கிரா கிழங்கை!
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அது போல் உடல்நிலை நன்றாக இருந்தால்தான் நன்றாக இயங்க முடியும், சுறுசுறுப்பாக செயல்பட முடியும். இதற்காக நாம் பெரியதாக ஒன்றும் செய்ய தேவையில்லை.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற உணவுகளை நாம் எடுத்துக் கொண்டாலே போதும். அந்த வகையில் அமுக்கிரா கிழங்கு உடலுக்கு சுறுசுறுப்பை தரும். கிழங்கு என்றால் ஏதோ உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு, சர்க்கரை வள்ளி கிழங்கு போல் இருக்கும் என நினைத்துவிட போகிறீர்கள்.
கிழங்கு இல்லை: இந்த கிழங்கு பார்ப்பதற்கு வேர் போல் இருக்கும். அதாவது அதிமதுரம் குச்சி போல் இருக்கும். இது உடலுக்கு ஊட்டத்தையும் சக்தியையும் அளிக்கிறது. மனதிற்கு உற்சாகத்தையும் வழங்குகிறது. வாத நோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கிரா கிழங்கு சிறந்த மருந்தாகும்.
தெம்பு கொடுக்கும்: பலவீனமாக இருக்கும் உடலுக்கு இது தெம்பை கொடுக்கிறது. குதிரை பலத்தை கொடுக்கும். நீண்ட ஆயுளை பெறலாம். இது இடுப்பு வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இந்த கிழங்கை இழைத்து வெந்நீருடன் கொதிக்க வைத்து போட்டால் வீக்கம் குறையும். உடல் எடையை குறைக்க உதவும். இந்த கிழங்கை பாலில் வேக வைத்து அதை கழுவி உலர்த்த வேண்டும்.
உடல் எடைக்கு அருமருந்து: பின்னர் அதை பொடி செய்துவிட்டு காலை, மாலை பசும்பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி ஓடிவிடும். மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும். இந்த அமுக்கிரா கிழங்கு விந்துக்களை பெருக்கும். ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளுக்கு அருமருந்தாக இருக்கும். குழந்தை பேறு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டால் குழந்தை உண்டாகும். உடல் எடை குறைய இந்த கிழங்கின் பொடியை 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். உடலில் உள்ள ஊளைச் சதையை குறைத்தாலும் உடல் சோர்வையாமல் ஊட்டச்சத்தை தக்க வைத்துக் கொள்ளும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications