Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வௌவால்" தலைகீழா மாத்துதே.. நீங்க உடல்எடை குறைக்கணுமா.. அள்ள அள்ள நன்மை தரும் வவ்வால் மீன்.. அருமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீனின் வகைகள் பல இருந்தாலும், அதில் சுவை + மருத்துவ குணம் என நிரம்பி உள்ளதுதான் வௌவால் மீன்கள்.. இந்த மீன் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் தெரியுமா?

பொதுவாக மீன்களிலேயே ஆற்று மீன் - கடல் மீன் என இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆற்று மீன், ஏரி மீன்கள் எல்லாம் ஆறு, குளம், ஏரிகளில் உள்ள புழு, பூச்சிகளை உணவாக உட்கொண்டு வளரும்.

Wonder Health benefits of pomfret fish and It is the best diet for losing weight

ஆனால், கடல் மீன்கள் கடலில் வளரும் கடல்பாசிகளை உட்கொண்டு வளர்வதால், அவற்றில் ஒமேகா-3 போன்ற குறிப்பிட்ட சத்துகள் அளவுக்கு அதிகமாகவே காணப்படுகின்றன.

ஒமேகா-3: கடல்பாசிகளில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் (Fatty Acid), புரதச் சத்தும் அதிகம் இருக்கிறது. அதனால், இவற்றைச் சாப்பிட்டு வளரும் கடல் மீன்களிலும் ஒமேகா-3 உள்ளது. ஆனால், ஆற்று மீன்களில் இந்த கொழுப்பு அமிலம் காணப்படுவதில்லை... மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன..

இந்த ஒமேகா-3 அமிலம்தான், உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் அதிக உளவு உதவுகிறது.. நம்முடைய உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது.. இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்த கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது என்கிறார்கள்.

வாவல் மீன்: அந்தவகையில், வவ்வால் மீன்களில் ஏகப்பட்ட பலன்கள் உண்டு.. வவ்வால் அல்லது வாவல் மீன் என்று சொல்வார்கள்.. இதிலேயே கடல் வவ்வால், ஏரி வவ்வால் என்று வகைகள் உண்டு. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன.. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிக மிக சிறந்தது இந்த மீன்.. ஆனால், மிதமான அளவில் இந்த மீன்களை எடுத்து கொள்ள வேண்டுமாம்.

குறைந்த அளவு எண்ணெய் உள்ளது. ஒமேகா 2 ஆசிட், வைட்டமின் ஏ, வைட்டமின் B1 மற்றும் வைட்டமின் D போன்றவை இதில் உள்ளன.. கொழுப்பு அமிலங்கள் மற்றும் B12 வைட்டமின்கள் உள்ளன... கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைகிறது...

ரத்த அழுத்தம்: ரத்த அழுத்தத்தையும் குறைகிறது. ரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலைப்படுத்தி இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுகிறது. மன அழுத்தத்தை குறைப்பது மட்டுமன்றி நினைவாற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.

குழந்தைகள் இந்த மீனை சாப்பிடுவதால் அவர்களின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கிறது... பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்கள் பெருகாமல் தடுக்கும் திறன் கொண்டது இந்த மீன்.. இதனால், மார்பக புற்றுநோய் வரும் அபாயத்தையும் தடுக்கிறது. உடல் எடை குறைப்போருக்கு இந்த மீன் சிறந்த சாய்ஸ்.. இந்த மீன் சாப்பிடுவதால், உடல் எடை குறைகிறது. காரணம், கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இது எடை இழப்பு போன்றவற்றிற்கு சிறந்த உணவாக இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+