For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிஎன்பிஎஸ்சி: 15 பணியிடங்களுக்கு 1 லட்சம் பேர்.. குரூப் 3 ஏ தேர்வில் கடும் போட்டி.. குவிந்த தேர்வர்கள்

15 காலிப்பணியிடங்களுக்கு இன்று நடைபெற்ற குரூப் 3 ஏ தேர்வினை ஒரு லட்சம் பேர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 14 இளநிலை ஆய்வாளர், ஒரு பண்டக காப்பாளர் என மொத்தம் 15 பணியிடங்களை நிரப்புவதற்காக இன்று குரூப் 3 ஏ தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

தமிழகத்தில் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் மூலமாக நிரப்பட்டு வருகிறது.

குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல்வேறு பிரிவுகளாக காலிப்பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி தேர்வு நடத்தி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் கால அட்டவணை வெளியிட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

என்னடா இது ஈரோட்டுக்கு வந்த சோதனை.. வாடகைக்கு வீடே கிடைக்கலியாம்.. திடீர் டிமாண்ட்.. ஏன்னு பாருங்கஎன்னடா இது ஈரோட்டுக்கு வந்த சோதனை.. வாடகைக்கு வீடே கிடைக்கலியாம்.. திடீர் டிமாண்ட்.. ஏன்னு பாருங்க

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழகத்தில் படித்து முடித்து விட்டு அரசு வேலை லட்சியத்துடன் காத்திருக்கும் பல லட்சம் இளைஞர்கள் டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். தேர்வு அறிவிக்கப்பட்டதும் முழு நேர வேலையாக படித்து எப்படியாவது வேலையை வாங்கி விட வேண்டும் என்ற கனவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இதனால், போட்டித்தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்து இருப்பது ஒருபக்கம் காரணம் என்றாலும் அரசு வேலை மீதான இளைஞர்களின் மோகமும் ஒரு காரணம்.

இளைஞர்கள் ஆர்வம்

இளைஞர்கள் ஆர்வம்

வேலை கிடைத்தால் நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு என ஏராளமான சலுகைகள் கிடைப்பதால் கால் காசு ஆனாலும் பரவாயில்லை கவர்மெண்ட் காசாக இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இளைஞர்கள் பலரும் அரசுத்தேர்வுகளை எழுத ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில் குரூப் 4 தேர்வு எழுத இளைஞர்கள் மத்தியில் கடும் ஆர்வம் இருக்க்கும் சில ஆயிரம் பணியிடங்களுக்கு பல லட்சம் பேர் எழுதுவதுண்டு. கடைசியாக நடைபெற்ற குரூப் 4 தேர்வை மட்டும் சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

15 இடங்களுக்கு தேர்வு

15 இடங்களுக்கு தேர்வு

இந்த நிலையில் குரூப்-3ஏ பதவிகளில் வரும் கூட்டுறவுத் துறையில் கூட்டுறவு சங்கத்தின் இளநிலை ஆய்வாளர் பணியிடங்களில் 14 இடங்களுக்கும், ஒரு பண்டக காப்பாளர் என மொத்தம் 15 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 98 ஆயிரத்து 807 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதாவது, ஒரு பணியிடத்துக்கு 6 ஆயிரத்து 587 பேர் போட்டியிடும் நிலை இருந்தது.

1 லட்சம் பேர் விண்ணப்பம்

1 லட்சம் பேர் விண்ணப்பம்

இந்த தேர்வு சனிக்கிழமை (ஜன.28) நடைபெற்றது. தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் 335 இடங்களில் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 37 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், குரூப் 3 ஏ தேர்வு இன்று தமிழ்நாட்டில் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்வை எழுத சுமார் 1 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 15 மாவட்டங்களில் 335 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 37 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

பாதிக்கும் மேற்பட்டோர் வரவில்லை

பாதிக்கும் மேற்பட்டோர் வரவில்லை

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. வெறும் 15 காலிப்பணியிடங்களுக்கு இந்த தேர்வை எழுந்த 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தாலும் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆப்சண்ட் ஆகினர். 44 ஆயிரத்து 321 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 54,486 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 44.86 சதவீதம் ஆகும். இதன்படி பார்த்தால் ஒரு பணியிடத்துக்கு 2, 954 பேர் போட்டியிட்டுள்ளனர்.

English summary
Group 3A examination was held today to fill up 15 vacancies including 14 Junior Inspector, one Store Keeper in Cooperative Societies. It is said that almost 1 lakh people wrote this exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X