For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு! ரயில்வேயில் 50 காலிப்பணியிடங்கள்! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த பணியில் விண்ணப்பிப்பவர்கள் சிவில் என்ஜினியரிங் படித்து முடித்திருக்க வேண்டும்.

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ரயில்வேயில் சுமார் 50 ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், இதற்கு இளைஞர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது.

 Central Railway invites applications for 50 Junior Technical Associate Posts

இந்திய ரயில்வேயில் மட்டும் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அவ்வப்போது பணியாட்கள் பணிக்காலம் முடிந்து வெளியேறி வருகின்றனர். இதனால் காலி பணியிடங்கள் உருவாகின்றன. இதனை நிரப்பும் விதமாக அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது காலியாக இருக்கும் 50 ஜூனியர் டெக்னிக்கல் அசோசியேட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. cr.indianrailways.gov.in எனும் இணையதளத்தில் இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்படி விண்ணப்பிப்பதற்கு வரும் 30ம் தேதிதான் இறுதி நாளாகும். இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சிவில் என்ஜினியரிங் 4 ஆண்டுகள் படித்து முடித்திருக்க வேண்டும். இவர்களுக்கு 18 முதல் 33 வயது வரை இருக்க வேண்டும். அதேபோல விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும்.

SC/ ST/ OBC/ பெண்கள்/ சிறுபான்மையினர்/ EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.250ஐ கட்டணமாக செலுத்தினால் போதும். இதில் இணையதளம் அல்லாது நேரடி முறையில் விண்ணப்பிக்க விரும்பினால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 'Deputy Chief Personnel Officer (Construction) Office of the Chief Administrative Officer (Construction) New Administrative Building, 6th Floor Opposite of Anjuman Islam School, D.N. Road, Central Railway, Mumbai CSMT, Maharashtra 400001' எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மற்ற தேர்வுகளை போலவே இவர்களுக்கும் எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று ஊழியர்களாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.5.1 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும்.

English summary
About 50 Junior Technical Associate Posts are vacant in Central Railway and youth are invited to apply. 30th is the last day to apply. Candidates who want to apply should have completed 4 years of Civil Engineering from a recognized institute.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X