ரூ.4 லட்சம் வரை சம்பளம் + நைட் ஷிப்ட் அலோவன்ஸ்.. சென்னை - கோவையிலேயே பணி
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட்டில் இருந்து சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு அக்டோபர் மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
நம் நாட்டில் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று காக்னிசண்ட் (Cognizant அல்லது Cognizant Technology Solutions Corporation). இந்த நிறுவனம் சென்னை, கோவையில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
காக்னிசண்ட் நிறுவனத்தில் தற்போது Multicloud - System Engineer பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த பணிக்கு பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்எஸ், எம்எஸ்சி படிப்பை ஏதேனும் ஒரு பிரிவில் முழுநேரமாக கல்லூரியில் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு 2021, 2022, 2023, 2024ல் படிப்பை 50 சதவீத மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
‛‛வீட்டில் இருந்தே வேலை’’.. ஃபுல் டைம் + பார்ட் டைம் பணிக்கு அழைக்கும் அமேசான்! மிஸ் பண்ணாதீங்க
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் முதலில் இன்ஜினியர் டிரெய்னியாக பணியமர்த்தப்படுவார்கள். அப்போது ஆண்டு சம்பளமாக ரூ.4 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் நைட்ஷிப்ட் அலோவன்ஸ் வழங்கப்படும். நிறுவனம் சார்பில் Cab வசதி ஏற்படுத்தி தரப்படும். சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு Rewards என்பது வழங்கப்படும்.
TCS ஐடி நிறுவனத்தில் வேலை.. செப்டம்பர் 28 ம் தேதி இண்டர்வியூ.. சென்னையிலேயே பணி
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, கோவை, பெங்களூர், புனே, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதுதவிர தேவையை பொறுத்து பணியாளர்கள் இந்தியாவில் எந்த நிறுவனத்துக்கு வேண்டுமானாலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முறைப்படி ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்ய அக்டோபர் 5ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் நள்ளிரவு 12 மணிக்குள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் தங்களின் கல்வி சான்றிதழ் பான் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here












Click it and Unblock the Notifications