தமிழக அரசு துறையில் டிரைவர் பணியிடங்கள்.. 70 ஆயிரம் சம்பளம்! லைசன்ஸ் இருக்கவங்க விட்றாதீங்க
சென்னை: தமிழக அரசின் சட்டத்துறையில் காலியாக இருக்க கூடிய 05 டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் 50 ஆயிரம் சம்பளம் இந்த பணிக்கு கிடைக்கும். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி கல்வித் தகுதி என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
தமிழக அரசின் சட்டத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் உரிய அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும். அந்த வகையில் தற்போது டிரைவர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மொத்தம் 5 டிரைவர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

கல்வித் தகுதி:
இந்த பணிக்கு 8 ஆம் வகுப்பு கல்வித் தகுதியுடன் டிரைவிங் லைசன்ஸ் வைத்து இருப்பது அவசியம். குறைந்தது 5 ஆண்டுகள் டிரைவராக பணி புரிந்த அனுபவம் இருப்பது அசியம் ஆகும்.
வயது வரம்பு
வயது வரம்பை பொறுத்தவரை 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பில் சம்பளம் வழங்கப்படும். பிசி/எம்பிசி பிரிவினர் என்றால் 34 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு சலுகை 37 ஆகும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.19,500- ரூ.71,900-வரை சம்பளமாக வழங்கப்படும். தேர்வு முறையை பொறுத்தவரை திறன் தேர்வு/ நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, சுய சான்று ஒப்பமிட்ட சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் ஆதார் கார்டு, வயது ஆதாரத்திற்கான சான்று, கல்வி மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும். டிரைவிங் லைசன்ஸ் நகல் இணைப்பது கட்டாயம். ரூ.70 க்கான போஸ்டல் ஸ்டாம்ப் உடன் சுய விலாசமிட்ட கடித் உறையை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Advocate General of Tamil Nadu,
High Court,
Chennai - 600104.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2026 ஆகும்.












Click it and Unblock the Notifications