அனுபவம் வேண்டாம்.. மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் அசத்தலான வேலை.. ரெடியா?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு யாரெல்லாம் விண்ணப்பம் செய்யலாம் என்பது பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான எச்சிஎல் டெக்-கில் இருந்து அடுத்தடுத்து வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. எச்சிஎல் நிறுவனம் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

it jobs job madurai

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் அடிக்கடி காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரையில் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மதுரையை எடுத்து கொண்டால் இலந்தைகுளம் பாண்டி கோவில் ரிங் ரோட்டில் அமைந்து இருக்கும் ElCOT IT SEZ-ல் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது மதுரை எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் தற்போது கிராசூவேட் இன்ஜினியர் டிரெய்னி (Graduate Engineer Trainee) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய முன்அனுபவம் தேவையில்லை. 2025ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
அதன்படி, பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் எம்சிஏ, எம்எஸ்சி படிப்பை முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் விண்ணப்பதாரர்கள் 10, பிளஸ் 2 மற்றும் இளநிலை, முதுநிலை படிப்புகளை 65 சதவீத மதிப்பெண்ணுடன் முடித்திருக்க வேண்டும். தற்போது மதுரையில் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டாலும் தேவையென்றால் பிற இடங்களில் உள்ள எச்சிஎல் நிறுவனத்துக்கும் மாற்றப்பட்டால் அங்கும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும். அதேபோல் பணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எனவே தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்வது நல்லது.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+