IBPS Job: வங்கி பணிக்கு அப்ளை பண்ணீங்களா? ஹால் டிக்கெட் வந்தாச்சு! ஐபிபிஎஸ் தந்த அறிவிப்பு.. உடனே இதை பண்ணுங்க
சென்னை: நாடு முழுவதும் உள்ள Regional Rural Banks எனப்படும் பிராந்திய கிராம வங்கிகளில் உள்ள 13,217 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தற்போது ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிபிஎஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை வங்கி பணியாளர் தேர்வு ஆணையம் (ஐபிபிஎஸ்) நிரப்பி வருகிறது. ஸ்டேட் வங்கி எனப்படும் எஸ்பிஐ வங்கியை தவிர இதர வங்கிகளில் ஏற்படக்கூடிய காலிப்பணியிடங்கள் பெரும்பாலும் ஐபிபிஎஸ் வழியாகவே நிரப்பபடுகிறது.

கிராம வங்கிகளில் வேலை
இதனால், ஐபிபிஎஸ் வெளியிடும் தேர்வு அறிவிப்பை தேர்வர்கள் பெரும் ஆர்வத்துடன் கார்த்திருப்பார்கள். அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் 13,217 காலிப்பணியிடங்களை நிரப்ப ஐபிபிஎஸ் அறிவிப்பு வெளியிட்டது. நாடு முழுவதும் உள்ள Regional Rural Banks எனப்படும் பிராந்திய கிராம வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
பணியிடங்கள் விவரம்:
* அலுவலக உதவியாளர்கள் (மல்டி பர்ப்பஸ்) - 7,972,
* அதிகாரி ஸ்கேல் I - 3,907 உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 13,217 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
கல்வித் தகுதி
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 21.09.2025 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்திலிருந்து ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்நாட்டு மொழி நன்கு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஹால் டிக்கெட் வெளியீடு
இந்த நிலையில், கிராம வங்கி பணிகளுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 14 ஆம் தேதி வரை ஹால் டிக்கெட்டை விண்ணப்பதார்ரகள் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தேர்வுகள் வரும் 6 , 7, 13 மறும் 14 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதார்கள், மெயின்ஸ் தேர்வுக்கு தகுதி பெறுவார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications