ஐடிபிஐ வங்கி வேலைவாய்ப்பு.. ஐடி வல்லுநர்களுக்கு வேலை.. ஒரு கோடி சம்பளம்! எப்படி விண்ணப்பிப்பது
டெல்லி :ஐடிபிஐ வங்கி ஆட்சேர்ப்பு 2021: தகவல் தொழில்நுட்ப (ஐடி) தலைவர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவரை நிரப்ப ஐடிபிஐ வங்கி விண்ணப்பங்களை அழைத்துள்ளது. பதவிக்கான காலம் மூன்று ஆண்டுகள் ஆகும், ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி ஜூன் 16 ஆகும். ஆர்வமுள்ள தகுதியான நபர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஜூன் 16 அல்லது அதற்கு முன்னர் idbi.co.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அனுப்பலாம்.
ஐடிபிஐ வங்கியின் ஐடி தலைவர் பதவியில் சேர தேவையான அனுபவங்கள்: இந்த பதவிக்கு, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒட்டுமொத்தமாக 20 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும், அதில் குறைந்தது 10 ஆண்டுகள் மூத்த மட்டத்தில் இருக்க வேண்டும், யாருக்கு முன்னுரிமை: ஒரு வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் அல்லது நிதி நிறுவனத்தில் தலைவாக இருந்தவர்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும்.

பொறுப்பாளி
என்ன வேலை: வங்கி நடவடிக்கைகளின் முழு அளவையும் டிஜிட்டல் மயமாக்குதல், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் காணுதல், வங்கி அமைப்புகளின் வளர்ச்சியை மேற்பார்வை செய்தல் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய வங்கியின் முழு தகவல் தொழில்நுட்ப நடவடிக்கைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கு பொறுப்பாளியாவார்.

படிப்பு என்ன
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர் பொறியியல் துறைகளில் முழுநேர முதுகலை அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், அதாவது எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு / கணினி அறிவியல் / மின்னணுவியல் மற்றும் மின் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அல்லது கணினி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்திய அரசு அங்கீகரித்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது
வயது: பதவிக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 45 மற்றும் அதிகபட்சம் 55 வயது
ஆண்டு ஊதியம் : தோராயமான வருடாந்திர சி.டி.சி 80 லட்சம் முதல் 1 கோடி வரை தரப்படும்.

ஜுன் 16 கடைசி தேதி
பணிக்கு தேவையான தகுதிகள் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை 2021 ஜூன் 16 அல்லது அதற்கு முன்னர் [email protected] க்கு அனுப்பலாம் என்று வங்கி தெரிவித்துள்ளது.ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்ட விரிவான அறிவிப்பினை பார்க்கலாம்.

எப்படி அறிவது
வேலை செய்ய வேண்டிய இடம் மும்பை.. இருப்பினும், வங்கியின் தேவைக்கேற்ப மற்ற ஊர்களுக்கு மாற்றவும் வங்கிக்கு உரிமை உள்ளது.முழு தகவலை- https://www.idbibank.in/index.asp என்ற முகப்பு பக்கத்தில் உள்ள ' 'Careers'' பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும் அதில் 'Current Openings' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அதில் Head - Information Technology பதவிக்கு உரிய முழு தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கும் அதில் பார்த்தது தெரிந்து கொள்ளலாம்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications