இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலை பார்க்க ஆசையா? 134 பணியிடங்கள்! டிகிரி முடிச்சவங்க விண்ணப்பிக்கலாம்
சென்னை: இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சயிண்டிபிக் அசிஸ்டண்ட், அட்மின் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். சம்பளத்தை பொறுத்தவரை ரூ.29 ஆயிரம் முதல் 1.20 லட்சம் வரை வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அலுவலகம் டெல்லியில் உள்ளது. வானிலை முன்னறிவிப்புகளை முன்கூட்டியே கணித்து வெளியிடும் பணியை வானிலை ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது. மத்திய புவியறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பிற்கு சென்னை, மும்பை, கொல்கத்தா, நாக்பூர், குவாஹத்தி ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களும் உள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
* சயிண்டிபிக் அசிஸ்டண்ட்: 25
* அட்மின் அசிஸ்டண்ட்: 02
* ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் டாப்ளர் வெதர் ரேடார்: 13
என மொத்தம் 22 வகையான பணிகளில் 136 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கல்வி தகுதி:
* சயிண்டிபிக் அசிஸ்டண்ட் பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இயற்பியல் பிரிவில் டிகிரி முடித்திருப்பது அவசியம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், டெலிகம்யூனிகேஷன் என்ஜினியரிங், கம்யூனிகேஷன் என்ஜினியரிங் உள்ளிட்ட பிரிவுகளில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
* அட்மின் அசிஸ்டண்ட் பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருக்கலாம். ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் பணிகளுக்கு துறை சார்ந்த பிரிவில் என்ஜினியரிங் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் தேர்வர்கள் தெரிந்துகொள்ளலாம்.
சம்பளம் எவ்வளவு?
* ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் E - ரூ.1,23,100/-
* ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் III - ரூ.78,000/-
* ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் II - ரூ.67,000/-
* ப்ராஜெக்ட் சயிண்டிஸ்ட் I - ரூ.56,000/-
* சயிண்டிபிக் அசிஸ்டண்ட் - ரூ.29,200/-
* அட்மின் அசிஸ்டண்ட் - ரூ.29,200/-
ஒப்பந்த அடிப்படையில் தேர்வர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு முறையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வர்கள் https://mausam.imd.gov.in/
என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
* விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கும் நாள்: 24.11.2025
* விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2025.
* தேர்வு அறிவிப்பினை படிக்க: https://internal.imd.gov.in/recruits/20251115_rec_248.pdf
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications