தேர்வே கிடையாது.. தலைநகர் சென்னையிலேயே பணி.. அழைக்கும் இந்தியன் வங்கி.. விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் ஏராளமான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி இந்தியன் வங்கியில் Chief Digital Officer பிரிவில் பல பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகளில் ஒன்றுதான் இந்தியன் வங்கி. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் முக்கிய விபரங்கள் வருமாறு:

வங்கியில் என்ன பணி?
இந்தியன் வங்கியில் Chief Digital Officer பிரிவில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சென்னையின் தான் பணி என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் பிற இடங்களுக்கு ஆட்கள் தேவையெனில் மாற்றம் செய்யப்படுவார்கள். பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் குறைந்தபட்சம் 35 வயதும், அதிகபட்சமாக 55 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். வயது வரம்பானது 01.07.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்

கல்வி தகுதி என்ன?
பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பிஇ/பிடெக், மற்றும் எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். அதோடு வங்கி மற்றும் நிதி சார் பிரிவில் 5 ஆண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும். டிஜிட்டல் துறையிலும், டெக்னாலஜி சார்ந்த விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல்பணப்பரிமாற்றம் தொடர்பான டீமை வழிநடத்தி இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?
இந்த பணி ஒப்பந்த அடிப்படையிலானது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு ஆப்லைன் முறையில் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு அனுப்பும் விண்ணப்பங்கள் நவம்பர் 25ம் தேதிக்குள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்று சேர வேண்டும். இதையடுத்து விண்ணப்பத்தாரர்கள் நேர்க்காணல் மற்றும் குழு கலந்துரையாடல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு என்பது கிடையாது.

விண்ணப்ப முகவரி
பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 நிர்ணயம் செய்யப்பட்டது. விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து General Manager (CDO), Indian Bank, Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications