மாத சம்பளம் ரூ.40,000.. இந்திய கடற்படையில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு..பிளஸ் 2 முடித்தாலே போதும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கடற்படையில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. 12ம் வகுப்பு முடித்த ஆண்களும், பெண்களும் விண்ணப்பம் செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் பெற முடியும்.

இந்தியாவின் பாதுகாப்பில் முப்படைகளான ராணுவம், கடற்படை, விமானப்படைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த படைகளுக்கான ஆட்சேர்ப்பு முறை என்பது சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதற்காக மத்திய அரசு அக்னிபாத் எனும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டத்தில் ஒருவர் குறைந்தபட்சம் நான்கு ஆண்டுகள் வரை பணி செய்ய முடியும்.

 காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

இந்த திட்டத்தின் அடிப்படையில் தான் தற்போது ராணுவம், விமானப்படை, கடற்படையில் ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய கடற்படையில் (Indian Navy) ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மொத்தம் 1,400 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் Agniveer-Senior Secondary Recruit (SSR) Post எனும் பிரிவில் நிரப்பப்பட உள்ளன. இதில் 280 பணியிடங்களுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 கல்வி தகுதி என்ன?

கல்வி தகுதி என்ன?

இந்தியக் கடற்படையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் மத்திய அரசு அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இயற்பியல், கணிதம் பாடப்பிரிவுகளோடு வேதியியல்/ பயாலஜி/கம்ப்யூட்டர் ஆகிய பாடங்களில் ஒன்றோடு 12ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 17.5(பதினேறு வயது 6 மாதம் அல்லது பதினேழு அரை) வயதில் இருக்க வேண்டும். அதிகபட்சமாக விண்ணப்பதாரர்கள் 23 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் 2022 மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 2005 அக்டோபர் 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

 மாத சம்பளம் என்ன?

மாத சம்பளம் என்ன?

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு முதல் ஆண்டு ரூ.30 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும். அதன்பிறகு தொடர்ந்து சம்பளம் அதிகரிக்கப்படும். அதன்படி 2வது ஆண்டு சம்பளம் ரூ.33 ஆயிரமாகவும், 3வது ஆண்டு ரூ.36,500 ஆகவும், 4வது ஆண்டு ரூ.40,000 சம்பளமாக வழங்கப்படும்.

 தேர்வு முறை எப்படி?

தேர்வு முறை எப்படி?

விண்ணப்பம் செய்பவர்கள் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்படுவார்கள். அதன்பிறகு எழுத்து தேர்வு, உடல்திறன் தேர்வு (Physical Efficiency Test or PET), உடல் தகுதி தேர்வு (Physical Measurement Test or PMT), சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 8 (8-12-2022) முதல் டிசம்பர் 17 (17-12-2022)ம் தேதிக்குள் ஆன்லைன் www.joinindiannavy.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். தேர்வு கட்டணமாக ரூ.550( ஜிஎஸ்டி உள்பட) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

டிசம்பர் 8 முதல் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+