ரயில்வேயில் வேலை.. கைநிறைய சம்பளம்.. தேர்வு எதுவும் கிடையாது.. எப்படி விண்ணப்பிக்கணும்? முழு தகவல்
சென்னை: இந்திய ரயில்வேயில் 13 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. இந்திய ரயில்வே உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட பொதுத்துறை நிறுவனம் என்ற சிறப்புக்குரியது.
ரயில்வேயில் வேலை பார்க்க யார் தான் விரும்ப மாட்டார்கள்? இந்தியாவில் அதிகம் பேருக்கு பணி வாய்ப்பை தரும் அரசு பொதுத் துறை நிறுவனமாக ரயில்வே இருந்து வருகிறது.
எனவே, ரயில்வே பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படுவது வழக்கம்.

பயணத்தை விரும்புவோர்கள்
பயணத்தை விரும்புவோருக்கும் இது ஒரு நல்ல பணி வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஊதியத்தோடு ஊர் ஊராக செல்ல விரும்புவோரின் விருப்ப தேர்வு ரயில்வே பணியிடங்கள்தான். இந்த நிலையில்தான் இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய ரயில்வே மண்டலத்தில் இருந்து பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

13 பேர் டாக்டர்கள்
அதாவது Medical Practitioner (Doctor) என்னும் பணியிடத்துக்கு 13 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க MBBS முடித்திருக்க வேண்டும். அத்துடன் Post Graduate Qualification முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 56 ஆகும்.

நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள் 18.02.2022 ஆகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் [email protected] என்ற இ.மெயில் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும். தேர்வு கிடையாது. நேர்முகத்தேர்வு மூலமாக மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மாத ஊதியம் இதுதான்
நேர்காணல் WhatsApp conference call முறையில் நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.75,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். பணியிடம் உள்ளிட்ட மேலும் விவரங்களை https://cr.indianrailways.gov.in/uploads/files/1623135997893-combinepdf%20(1).pdf என்ற இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications