IT JOBS: பிளஸ் டூ முதல் டிகிரி படித்தோருக்கு ஐடி வேலை.. சென்னை HCL-லில் டிச 29-30ல் இண்டர்வியூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக எச்சிஎல் செயல்பட்டு வருகிறது. தற்போது எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் International Banking Process Associate பிரிவுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

it-jobs-hcl-hiring-for-international-banking-voice-process-role-in-chennai-and-interview-on-decembe

பணிக்கு தேர்வாகும் நபர்கள் Inbound Calling Process பிரிவில் அசோசியேட்ஸ், அனலிஸ்ட்டாக நியமனம் செய்யப்பட உள்ளனர். சேல்ஸ், அப்செல்லிங், கிராஸ் செல்லிங் உள்ளிட்ட பணிகள் இருக்காது.

இந்த பணிக்கு பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோருக்கு சில முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதன்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதேபோல் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் இருக்க வேண்டும்.

இதுதவிர மல்டி டாஸ்க்கிங்கிற்கு தயாராக இருப்பதோடு, தனியாகவும், டீமாகவும் சேர்ந்து பணியாற்ற ரெடியாக இருக்க வேண்டும். கிளைன்ட்டின் கேள்விகளுக்கு வாய்ஸ் மற்றும் ரிட்டர்ன் முறையில் பதிலளிக்க தயாராக இருக்க வேண்டும். புராடெக்ட், சர்வீஸ், டே்டா மற்றும் கிளைன்ட் அக்கவுண்ட் சார்ந்த கேள்விகளுக்கு பதிளிக்க தயாராக இருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இன்டர்நேஷனல் வாய்ஸ் புராசஸில் குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 3 ஆண்டு அனுபவம் கொண்டிருப்போர் அசோசியேட்டாகவும், 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை அனுபவம் உள்ளவர்கள் அனலிஸ்ட்டாகவும் நியமனம் செய்யப்பட உள்ளனர். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.

இந்த பணிக்கான இண்டர்வியூ டிசம்பர் 29 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் அன்றைய தினம் HCL AMB - 6, 104-8, Sai Nagar, Ambattur Industrial Estate, Chennai, - 600 076 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சோழிங்கநல்லூரில் உள்ள அலுவலகத்தில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+