அரசு வேலை.. 8594 காலியிடங்கள்.. பட்டதாரிகளே சான்ஸை மிஸ் பண்ணிடாதீங்க.. இன்றே கடைசி நாள்
சென்னை: ரீஜினல் ரூரல் வங்கி என்று அழைக்கப்படும் கிராமிய வங்கிகளில் (Regional Rural Bank) அதிகாரிகள் பணியிடங்கள், I,II & III மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் காலியிடங்கள் என மொத்தம் 8594 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் ஐபீபிஎஸ்-ஆர்ஆர்பி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது.
ஐபீபிஎஸ்-ஆர்ஆர்பி தேர்வின் மூலம் கிராமிய வங்கிகளில் உள்ள ஏராளமான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணபிக்க வேண்டும்.
என்னென்ன பணியிடங்கள் என்பதை பாருங்கள்:

1. அலுவலக உதவியாளர் (Multipurpose): வயது: 18 முதல் 28க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் எந்த மாநிலத்தில் வேலை வேண்டும் என விண்ணப்பிக்கிறார்களோ அந்த மாநிலத்தின் உள்ளூர் மொழியில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
2. அதிகாரி Scale- I (Assistant Manager): வயது: 18 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்புடன் கணினியில் பணிபுரியும் திறன் உள்ளவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியில் கண்டிப்பாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.
3. அதிகாரி Scale-II (Specialist Officers (Manager)): மொத்தம் ஆறு வகையான சிறப்பு தகுதி உடைய அதிகாரிகள் தேவைப்படுகிறார்கள். என்னென்ன தகுதி, அதற்கு என்ன படித்திருக்க வேண்டும் என்பதை பாருங்கள்.
தகுதிகள்: i) தகவல் தொழில்நுட்ப அதிகாரி: எலக்ட்ரானிக்ஸ்/கம்யூனிகேஷன்/கணினி அறிவியல்/தகவல் தொழில்நுட்பம்ஆகிய பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று ஒரு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.
ii)பட்டய கணக்காளர் : சிஏ தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
iii) சட்ட அதிகாரி : சட்ட பாடப்பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
iv) கருவூல மேலாளர் : சிஏ தேர்ச்சி அல்லது நிதி பாடத்தில் எம்பிஏ பட்டம். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
v) மார்க்கெட்டிங் அதிகாரி: மார்க்கெட்டிங் பாடத்தில் எம்பிஏ பட்டம் மற்றும் ஒரு வருட பணி அனுபவம்.
vi) வேளாண் அதிகாரி: வேளாண்மை/தோட்டக்கலை/பால்வளர்ப்பு/கால்நடை வளர்ப்பு/வனவியல்/கால்நடை அறிவியல்/வேளாண் பொறியியல்/மீன் வளர்ப்பு பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப்படிப்புடன் 2 வருட
பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது: 21 லிருந்து 32க்குள் இருக்க வேண்டும்.

4. Officer Scale-III (Senior Manager) (Manager): தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வங்கி/நிதி/சந்தைப்படுத்தல்/விவசாயம்/தோட்டக்கலை/வனவியல்/விலங்கு பராமரிப்பு/கால்நடை அறிவியல்/வேளாண் பொறியியல்/ மீன் வளர்ப்பு/வேளாண் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டுறவு/ஐடி/மேலாண்மை/ சட்டம்/பொருளாதாரம்/கணக்கியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் இளநிலைப்பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது: 21 முதல் 40க்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வங்கியில் மேஜனர் விண்ணப்பிக்க விரும்புவோர் பணிக்கு 2 வருடங்களும், Senior Manager பணிக்கு 5 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.6.2023 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், கணவனை இழந்தவர்கள்/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பக கட்டணம்: ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிக்கு (மல்டி பர்ப்போஸ்) பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் பிரிவினருக்கு ₹850/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.175/ ஆகும். ஆபீசர் ஸ்கேல், I, II, III ஆகிய பணிகளுக்கு பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ. 850/-. இதர பிரிவினருக்கு ரூ.175/-. இதை ஆன்லைனில் முறையில் செலுத்த வே்ணடும்.
ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிக்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இதர பணிகளுக்கு ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆபீசர் ஸ்கேல்-1 மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட் பணிகளுக்கான ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, முதல் நிலை தேர்வு மற்றும் பிரதான தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர், விருதுநகர், புதுச்சேரியில் முதல் நிலை தேர்வு (Preliminary) நடைபெறும். சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் பிரதான தேர்வு (Main) நடைபெறும்.
எப்படி விண்ணப்பிப்பது? www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று 21.6.2023.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications