செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் வேலை.. 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பு இருக்கிறது. மாதம் 22 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 27ம் தேதி அன்று மாலைக்குள் விண்ணப்பிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.

செங்கல்பட்டு மாவட்ட வன அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "செங்கல்பட்டு, மாவட்ட காலநிலை மாற்ற இயக்க குழு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. வனத்துறை மூலம் அலுவலக பணிகள் மேற்கொள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியை நிரப்ப உள்ளது. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. பணி புரிய வேண்டிய காலம் 19 மாதம். இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Chengalpattu jobs forest job

மேலும் கூடுதல் தகுதியாக தட்டச்சுக் கல்வியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ஊதியம் ரூ.22000/- (பணிபுரியும் காலம் 19 மாதங்கள் மட்டுமே). விண்ணப்பதாரர் சுய விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தட்டச்சு செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு வரும் 27.10.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கால கெடுவிற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் வருமான வரித்துறையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் வரி உதவியாளர், இரண்டாம் நிலை சுருக்கெழுத்தாளர் மற்றும் பல்பணி ஊழியர் ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

* காலிப்பணியிடங்கள்: 119
* கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு டிகிரி,
* வயது வரம்பு: 18 முதல் 27 வரை,
* ஊதிய விவரம்: ரூ.18,000 முதல் ரூ.81,100 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, விளையாட்டுச் சாதனைகள், சான்றிதழ் சரிபார்ப்பு
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 10.11.2026
* மேலும் விவரங்களுக்கு: https://incometaxdelhi.gov.in/pdf/whatsnewfiles/101626131322Sports%20Quota%20Advertisement%20(Eng)%202026.pdf என்ற லிங்கில் பாருங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+