சென்னை அமைந்தகரை கோவிலில் வேலை.. மாதம் 42 ஆயிரம் சம்பளம்.. எழுத படிக்க தெரிந்தால் போதும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அமைந்தகரையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளா இந்த கோயிலில், அலுவலக உதவியளர், இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. எழுத படிக்க தெரிந்தவர்கள், 8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000 சம்பளம் வழங்கப்படும்.

சென்னை அமைந்தகரையில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் ஏற்படும் நிர்வாக ரீதியிலான பணியிடங்கள் உள்ளிட்டவற்றை இந்து சமய அறநிலையத்துறை உரிய அறிவிப்புகள், நேர்முகத்தேர்வு வாயிலாக நிரப்பி வருகிறது.

job Jobs employment

காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வப்போது இது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 7 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

பரிச்சாரகர் / சுயம்பாகி: 01
அலுவலக உதவியளர்: 01
இரவு காவலர்: 01
திருவலகு: 04

கல்வி தகுதி:

* பரிச்சாரகர்/ சுயம்பாகி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும். கோயிலில் பழக்க வழக்கத்திற்கேற்ப நைவேத்யம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்து இருக்க வேண்டும். பூஜை மற்றும் சடங்குகளை நடத்துவதற்கான வழக்கமான நடைமுறைகளை அறிந்து இருக்க வேண்டும்.

* அலுவலக உதவியாளர் பணிக்கு குறைந்தது எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* இரவு காவலர் மற்றும் திருவலகு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்து இருந்தால் போதுமானது.

சம்பளம் எவ்வளவு?

* சுயம்பாகி: ரூ. 13,200 - 41,800
* அலுவலக உதவியாளர்: ரூ. 12,600 - 39,900
* இரவு காவலர்: ரூ. 11,600 - 36,800
* திருவலகு: ரூ. 10,000- 31,500

விண்ணப்பிப்பது எப்படி?

* ஆர்வமும் தேவையான கல்வி தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 05.02.2025 முதல் 07.03.2025 வரை கோவில் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 07.03.2025 அன்று மாலை 5.45 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் குறிப்பிட்ட பணியிடத்திற்கான விண்ணப்பம்" என தெளிவாக குறிப்பிட்டு செயல் அலுவலர், அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை-29." என்ற முகவரிக்கு நேரிலோ/அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

* மேலும் ரூ.35/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டையுடனும் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.07.03.2025 மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

பிற விவரங்கள்;

* விண்ணப்பதாரர் 01.07.2024-ம் தேதி அன்று 18, வயது பூர்த்தியடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல் போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் (Attested Xerox Copy Only) பெற்று அனுப்பப்பட வேண்டும்.

* விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் (Transfer Certificate) நகல் இணைக்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர் இத்திருக்கோயிலின் உபகோயில்களுக்கும். பணியிட மாறுதல் செய்யப்படுவார்.

* பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும். நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணப்படியும் வழங்கப்படமாட்டாது.

தேர்வு அறிவிப்பினை படிக்க: https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+