தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை.. பி.இ முடித்தவர்களுக்கு சான்ஸ்.. விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி விஓசி துறைமுகத்தில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? கல்வித் தகுதி என்ன ஆகிய விவரங்களை பார்க்கலாம்.

தூத்துக்குடியில் உள்ள விஓசி துறைமுகம் நாட்டில் உள்ள 12 துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 2-வது பெரிய துறைமுகம் இதுவாகும். மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த துறைமுகத்தில் காலியாக உள்ள 17 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வி தகுதி என்ன? வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

job Jobs Employment

பணியிடங்கள் விவரம்: கன்சல்டண்ட், அசோசியேட் கன்சல்டண்ட், புரெபசனல் (Young Professional) ஜூனியர் புரெபசனல் இண்டெர்ன் என மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

கல்வித் தகுதி: கல்வி தகுதியை பொறுத்தவரை பி.இ, பிடெக், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். துறை சார்ந்த பிரிவை எடுத்து படித்து இருப்பது அவசியம். அனுபவமும் கோரப்பட்டுள்ளது. கல்வித் தகுதி பணியிடங்கள் பற்றிய முழு விவரத்தை கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் தேர்வு அறிவிப்பில் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

சம்பளம் எவ்வளவு?:

ஆலோசகர் (Consultant)- ரூ.60,000/-
இணை ஆலோசகர் (Associate Consultant) - ரூ.50,000/-
யங் புரெபெசன் - ரூ.30,000/-
ஜூனியர் தொழில்முறை பயிற்சியாளர் - ரூ.20,000/-

வயது வரம்பு: ஆலோசகர் பணியிடத்திற்கு 45 வயது வரை விண்ணப்பிக்கலாம். அசோசியேட் கன்சல்டண்ட் பணிக்கு 40 வயது அதிகபட்ச வயது வரம்பு ஆகும். இதர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.

தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையிலானது ஆகும். விண்ணப்பிக்க அவகாசம் தொடங்கிய நாள் 19.02.2025 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2025 ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+