8 அல்லது 10ம் வகுப்பு பாஸ் செய்திருந்தால் போதும்.. ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு.. 1664 பணியிடங்கள்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜிலுள்ள வட மத்திய ரயில்வே (NCR) பணியாளர் சேர்க்கையை துவங்கியுள்ளது.
இந்தியன் ரயில்வேயின் வட மத்திய ரயில்வேயில், பிரயாக்ராஜ், ஆக்ரா, ஜான்சி ஒர்க் ஷாப் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இந்த பணியிடங்கள் உள்ளன. ஐடிஐ மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது சிறப்பம்சமாகும்.

ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய துவக்க தேதி 2021 ஆகஸ்ட் 2. ஆன்லைன் விண்ணப்பத்தின் கடைசி தேதி - 2021, செப்டம்பர் 1.
வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ .100 சமர்ப்பிக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
தகுதி வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி கொண்டவராக (10+2 நடைமுறை) இருக்க வேண்டும்.
வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்), வயர்மேன் மற்றும் தச்சர் பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ / டிரேட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மொத்தம், 1664 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. rrcpryj.org இல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
-
தூத்துக்குடியில் வேலை.. சுகாதார ஆய்வாளர், செவிலியர் என 44 பணியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? -
IT Jobs: டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் ஜூன் 13ல் இண்டர்வியூ.. சென்னையில் அசத்தலான வேலை ரெடி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications