For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாத சம்பளம் ரூ.89 ஆயிரம்.. பரோடா வங்கியில் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?

Google Oneindia Tamil News

சென்னை: Bank Of Baroda வங்கியில் ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாத சம்பளமாக அதிகபட்சம் ரூ.89 ஆயிரம் வரை கிடைக்கும்.

Bank Of Baroda வங்கியில் Relationship Manager, Credit Analyst பணிக்கான காலியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்களை அறிந்து தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம். அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

மாத சம்பளம் ரூ.42 ஆயிரம்... சென்னை சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் பணி.. விண்ணப்பிப்பது எப்படி? மாத சம்பளம் ரூ.42 ஆயிரம்... சென்னை சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?

காலியிடங்கள் எவ்வளவு?

காலியிடங்கள் எவ்வளவு?

Bank of Baroda (BOB) வங்கியில் Relationship Manager, Credit Analyst பிரிவில் மொத்தம் 325 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் Relationship Manager பிரிவில் 175 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் SMG / S IV பிரிவில் 75, MMG / S III பிரிவில் 100 பணியிடம் உள்ளது. Credit Analyst பிரிவில் 150 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் MMG / S III பிரிவில் 100, MMG / S II பிரிவில் 50 பணியிடங்கள் அடங்கும்.

கல்வித் தகுதி என்ன?

கல்வித் தகுதி என்ன?

Relationship Manager பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு Finance பாடப்பிரிவில் Post Graduate Degree / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Credit Analyst பணிக்கு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். Finance பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பணிகளுக்கு CA / CMA / CS / CFA முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் பணிப்பிரிவில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு என்ன?

வயது வரம்பு என்ன?

Relationship Manager பணியில் SMG / S IV பிரிவிற்கு 35 வயது முதல் 42 வயது வரை இருக்க வேண்டும். MMG / S III பிரிவிற்கு 28 வயது முதல் 35 வயது வரையிலானவர்கள் விண்ணப்பிக்கலாம். Credit Analyst பணியில் MMG / S III பிரிவிற்கு 28 வயது முதல் 35 வயதுக்குள்ளும், MMG / S II பிரிவிற்கு 25 வயது முதல் 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். அரசு விதிகள்படி வயது தளர்வு உண்டு.

சம்பளம் என்ன?

சம்பளம் என்ன?

MMGS II பிரிவிற்கு குறைந்தது ரூ.48,170 முதல் அதிகபட்சம் ரூ.69,180 வரையும், MMGS III பிரிவிற்கு குறைந்தது ரூ.6,840 முதல் அதிகபட்சம் ரூ.78,230 வரையும் சம்பளமாக கிடைக்கும். SMG/S-IV பிரிவிற்கு குறைந்தது ரூ.76,010 முதல் அதிகபட்சம் ரூ.89,890 வரையும் ஊதியம் கிடைக்கும். விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வுகள் மூலம் Shortlist செய்யப்பட்டு நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு அல்லது Group Discussion மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் https://www.bankofbaroda.in/career/current-opportunities/ இணையதளம் சென்று ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து 12.07.2022ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். GEN / OBC / EWS விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.600 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST / PWD / Women விண்ணப்பதாரர்கள் ரூ.100/- செலுத்த வேண்டும்.

கூடுதல் விபரங்கள் அறிய விரும்புவோர்https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/advertisement-cic-22-06-2022-21-29.pdf கிளிக் செய்து பணி பற்றிய அறிவிப்பானையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

English summary
Bank Of Baroda Bank has a number of vacancies to fill. Degree and Diploma graduates can apply. The maximum monthly salary is up to Rs 89,000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X