ரயில்வே துறையில் 2659 காலியிடங்கள்! டிப்ளமோ படித்தாலே விண்ணப்பிக்கலாம்! இப்படியொரு சான்ஸ் கிடைக்காது
சென்னை: இந்தியன் ரயில்வேயில் காலியாக இருக்கும் ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் காலியாக இருக்கும் 2659 பணிகளை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்குக் கல்வித் தகுதி என்ன இதற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நாட்டிலேயே மிக அதிகப் பேருக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் துறைகளில் ஒன்றாக ரயில்வே துறை இருக்கிறது. இதற்கிடையே ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை ரயில்வே துறை வெளியிட்டிருந்தது.

ரயில்வே துறை
இதில் ஜூனியர் இன்ஜினியர் (JE), டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு (DMS) மற்றும் கெமிக்கல் & மெட்டலார்ஜிக்கல் அசிஸ்டென்ட் (CMA) ஆகிய பணியிடங்களை ரயில்வே துறை நிரப்பவுள்ளது. மொத்தம் 2,569 காலியிடங்கள் இருக்கும் நிலையில், இந்தப் பணிகளில் சேர ஆர்வமும் தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளுக்கு நவம்பர் 30ம் தேதி வரை ஆன்லைன் வழியாக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசி (நான் க்ரீமி லேயர்) பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வித் தகுதி
ஜூனியர் இன்ஜினியர் மற்றும் அது தொடர்பான பதவிகளுக்கு இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி. அல்லது அது சார்ந்த துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலைப் பட்டம் (BE/BTech) பெற்றிருக்க வேண்டும். கெமிக்கல் மற்றும் மெட்டலார்ஜிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு, இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி என்ன என்பது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இது குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் அடிப்படையிலான இரண்டு எழுத்துத் தேர்வு மூலம் இதில் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்ட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதற்குப் பிறகு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதம் ₹35,400 சம்பளமாக வழங்கப்படும்.
முக்கியமான தகவல்கள்
என்ன பணி: ஜூனியர் இன்ஜினியர், டிப்போ மெட்டீரியல் சூப்பிரண்டு, கெமிக்கல் & மெட்டலார்ஜிக்கல் அசிஸ்டென்ட்
மொத்தக் காலியிடங்கள்: 2569
கல்வித் தகுதி: டிப்ளமோ முதல் பிஇ வரை (பதவியைப் பொறுத்து மாறும்)
சம்பளம்: ரூ.35,400
வயது வரம்பு: 18 முதல் 33 வயது (அரசு ஒதுக்கீட்டின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது)
தேர்வுக் கட்டணம்: ரூ.500
எஸ்பி, எஸ்டி, மாற்றுத் திறனாளிகள், பெண்கள், சிறுபான்மையினருக்கு ரூ.250
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: நவம்பர் 30
தேர்வுக் கட்டணம் செலுத்தக் கடைசித் தேதி: டிசம்பர் 2
தேர்வு தேதி: பின்னர் அறிவிக்கப்படும்
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- அங்கு ஹோம் பக்கத்திலேயே "RRB JE Recruitment" என இருக்கும். அங்குக் கீழ் உள்ள "Apply" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- ஆதார் அட்டை மூலம் லாகின் செய்யலாம்.. அல்லது புதிய கணக்கை உருவாக்கலாம்.
- பின்னர், எந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கிறீர்களோ அந்தத் தரவுகளைப் பூர்த்தி செய்யுங்கள். கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- அனைத்தையும் ஒரு முறை சரி பார்த்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
-
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
தீ என பரவிய வதந்தி.. தப்பிக்க பக்கத்து தண்டவாளத்தில் குதித்த 4 பேருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சி வீடியோ












Click it and Unblock the Notifications