Bank Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி வேலை.. 996 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்.. விட்றாதீங்க
சென்னை: எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 996 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு என்ன, எப்படி விண்ணப்பிப்பது போன்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ உள்ளது. இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் இந்த வங்கிக்கு கிளைகள் உள்ளன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வரும் எஸ்பிஐ வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி என்ன? என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
VP Wealth (SRM) - 506
AVP Wealth (RM) - 206
கஸ்டமர் ரிலேஷன்ஷிப் ஆஃபிசர் - 284
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து டிகிரி முடித்து இருப்பது அவசியம். எம்பிஏ (பேங்கிங், நிதி, மார்க்கெட்டிங்) 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். CFP /CFA, NISM V-A, XXI-A ஆகிய சான்றிதழ் படிப்புகளுடன் வங்கிகளில் 6 ஆண்டு பணி புரிந்த முன்னுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸ்கியூட்டிவ் பணிக்கு டிகிரியுடன் வங்கிகளில் பணியாற்றிய அனுபவம் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வர்கள் கல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தேர்வு அறிவிப்பில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.
வயது வரம்பு:
VP Wealth (SRM) - 26 வயது முதல் 42 வயது வரை
AVP Wealth (RM) - 23 வயது முதல் 35 வயது வரை
கஸ்டமர் ரிலேஷன்ஷிப் எக்ஸ்கியூட்டிவ் - 20 வயது முதல் 35 வயது வரை
அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.
தேர்வு முறை:
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
ஆன்லைன் வழியாக விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் 23.12.2025 கடைசி நாளாகும். தேர்வர்கள் விண்ணப்பிக்கும் முன்பாக தேர்வு அறிவிப்பினை ஒருமுறைக்கு இருமுறை படித்து கல்வி தகுதி விவரங்களை உறுதி செய்து கொள்ளவும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க:
https://sbi.bank.in/documents/77530/52947104/1_Advertisement+_Wealth+MGMT_02.12.2025.pdf/2788f63d-697c-ee09-2fb0-1c6502d171a7?t=1764654253632












Click it and Unblock the Notifications