தேர்வு கிடையாது.. சவுத் இந்தியன் வங்கியில் சூப்பர் வேலைவாய்ப்பு..ஆண்டுக்கு ரூ.10.30 லட்சம் சம்பளம்!
பெங்களூர்: சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள சேல்ஸ் மேனேஜர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சமாக ரூ.9.30 லட்சம் வரையும், அதிகபட்சமாக ரூ.10.30 லட்சம் வரையும் சம்பளம் வழங்கப்பட உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு இன்றி நேர்க்காணல் முறையில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.
இந்தியாவில் உள்ள முன்னணியில் உள்ள தனியார் வங்கியில் சவுத் இந்தியன் வங்கியும் ஒன்றாகும். இது கேரளாவின் திரிச்சூரை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் காலியாக உள்ள பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது சேல்ஸ் மேனேஜர் பிரிவில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

பணியின் பெயர்-வயது வரம்பு என்ன?
சவுத் இந்தியன் வங்கியில் சேல்ஸ் மேனேஜர்(ஹவுசிங் லோன்( Sales Manager- Housing Loan) பிரிவில் காலியா உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. பணிக்கு விண்ணப்பம் செய்வோர் அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்களின் வயதானது 31.12.2022 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.

கல்வி தகுதி-ஊதியம் என்ன?
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். கூடுதலாக எம்பிஏ அல்லது பிஜிடிபிஎம் படிப்புகளை படித்திருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் எவ்வளவு?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.9.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.10.30 லட்சம் வரை ஊதியம் கிடைக்கும். தேர்வு செய்யப்படும் நபர்கள் இந்தியாவின் எந்த பகுதிகளில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளது என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.southindianbank.com எனும் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய 2023 ஜனவரி 23ம் தேதி கடைசிநாளாகும். விண்ணப்ப கட்டணமாக ரூ.100 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பம் செய்பவர்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய Click Here
அதிகாரப்பூர் இணையதளம் செல்ல Click Here












Click it and Unblock the Notifications