இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 4 கல்லூரிக்கு உயர்க்கல்வித் துறையிடம் அனுமதி பெற்றுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார்.
சென்னை கொளத்தூர் மற்றும் கீழ்ப்பாக்கம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம், திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி, வேலூர் மாவட்டம் அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம், தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருச்சி மாவட்டம் லால்குடி, தென்காசி மாவட்டம் கடையம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆகிய இடங்களில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழநியில் சித்த மருத்துவமனை துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் மேற்படிப்பு படிக்க இயலாத மாணவ, மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன. கல்லூரி தொடங்குவதற்கான இடம் தேர்வு, உள்கட்டமைப்புகள் மேம்பாடு, அடிப்படை வசதிகள், ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் சேர்ப்பு உள்ளிட்ட பணிகளை மக்கள் நல பிரதிநிதிகள் துரிதப்படுத்த வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதற்கான உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை கொளத்தூரில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை, அறிவியல் கல்லூரி, திருச்செங்கோட்டில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை, அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, விளாத்திகுளத்தில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளில் தற்காலிகமாக தனியார் மற்றும் திருக்கோயில்களுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4 கல்லூரிகளிலும் BCA, http://B.Com., BBA., http://B.Sc., ( Computer Science ) என்று 4 பாடப்பிரிவுகளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 4 கல்லூரிகளும் சுயநிதி கல்லூரிகளாகவே செயல்படும் என்றும் தடையில்லா சான்று, கூட்டு நிலை வைப்புத்தொகை செலுத்துவது உள்ளிட்டவற்றில் இருந்து விலக்களித்து உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications