மாதஊதியம் ரூ.50,000 டூ ரூ.2.50 லட்சம்.. தமிழக திறன் மேம்பாட்டு கழகத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. ஆஹா!
சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள ஏராளமான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2.50 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதோடு, அவர்களுக்கு சென்னையிலேயே பணி வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் (Tamil Nadu Skill Development Corporation or TNSDC) காலியாக உள்ள பணியிடங்கள் அடிக்கடி நிரப்பப்பட்டு வருகிறது.
அதன்படி தற்போது புதிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அசோசியேட் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணி தொடர்பான அறிவிப்பின் முக்கிய விபரங்கள்வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
அதன்படி விபி- கேரியர் போர்டல், ஏவிபி-இன்டஸ்ட்ரி எங்கேஜ்மெண்ட் (எம்இஏசி), ஏவிபி - எச்ஆர் மற்றும் ட்ரெய்னிங், சீனியர் அசோசியேட்ஸ் (சர்வீஸ் இன்டஸ்ட்ரி), சீனியர் அசோசியேட்ஸ் (எம்இஏசி) பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். சீனியர் சாப்ட்வேர் அசோசியேட்ஸ் /ஐடி கோஆடினேட்டர் பணிக்கு 2 பேர், சீனியர் அசோசியேட்ஸ் - மீடியா பணி, ப்ராஜெக்ட் மேனேஜர் (காம்பெட்டேட்டிவ் எக்ஸாம்) பணிக்கு தலா ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ப்ராஜெக்ட் அசோசியேட்ஸ் பணிக்கு 6 பேர் என மொத்தம் 15 பேர்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கல்வி தகுதி என்ன?
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி கல்வி தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிஇ, பிடெக், எம்சிஏ, எம்எஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்), எம்பிஏ, விசுவல் கம்யூனிகேசன், ஜார்னலிசம், மீடியா மார்க்கெட்டிங், பிசிஏ, பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) உள்ளிட்ட படிப்புகளை படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

மாத சம்பளம் என்ன?
பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.50 ஆயிரமும், அதிகபட்சமாக மாதம் ரூ.2.50 லட்சம் வரையும் வழங்கப்பட உள்ளது. VP - Career Portal பணிக்கு மாதம் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2.50 லட்சம் வரையும், AVP - Industry Engagement (MEAC) மற்றும் AVP - HR & Training பணிக்கு மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரையும் கிடைக்கும். Senior Associates (Service Industry), Senior Associates (MEAC), Senior Software Associates/ IT Coordinator Senior Associates - Media பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் Project Manager (Competitive Exam) பணிக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம்வ ரையும், Project Associate பணிக்கு மாதம் ரூ.60 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பம் செய்வது எப்படி?
பணிக்கு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இது ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் ஆன்லைனில் tnskill.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
பணிக்கு விண்ணப்பம் செய்ய Click Here
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
AIIMS Jobs: எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை! 2,668 காலியிடங்கள்! 10 டூ டிகிரி போதும்.. தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க -
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்!












Click it and Unblock the Notifications