TCS வேலைவாய்ப்பு.. சென்னை, பெங்களூர் உள்பட 7 இடங்களில் பணி நியமனம்.. மிஸ் பண்ணாதீங்க
சென்னை: பிரபல ஐடி நிறுவனமான டிசிஎஸ்-ல் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யலாம். தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்பட 7 இடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர்.
டிசிஎஸ் (TCS or Tata Consultancy Services) என்பது நம் நாட்டில் செயல்பட்டு வரும் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தில் அடுத்தடுத்து பல்வேறு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது தான் சென்னை உள்பட 7 இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
தற்போதைய அறிவிப்பின்படி டிசிஎஸ் நிறுவனத்தில் VMWare Architect பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் விண்டோஸ் சர்வர்,லினக்ஸ், எச்ஏ/டிஆர வகை கான்பிகிரேஷன்ஸ், சர்வர் ஹார்ட்வேர் பிளாட்பார்ம் எக்ஸ்86, Cloud Orchestration Platforms, VMWare EsX, vSphere, VRa, HCX, SAN, NAS, DAS, RaID, SCSI, Fibre Channel, Backup to Disk, Clustering, encryptiono technologies உள்ளிட்டவற்றில் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ரூ.4 லட்சம் வரை சம்பளம் + நைட் ஷிப்ட் அலோவன்ஸ்.. சென்னை - கோவையிலேயே பணி
இதுதவிர VMWare Networking - NSX-T, AWS/Azure/GCP தெரிந்திருந்தால் அது விண்ணப்பத்தாரர்களுக்கு கூடுதல் பிளஸ் பாயிண்ட்டாகும். மேலும் மேற்கூறிய குறிப்பிட்ட துறையில் குறைந்தபட்சம் 8 முதல் அதிகபட்சமாக 18 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, டெல்லி என்சிஆர், கொல்கத்தா, இந்தூர் உள்ளிட்ட இடங்களில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். பணிக்கான மாத சம்பளம் அல்லது ஆண்டு சம்பளம் என்பது பற்றி தற்போது எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
விருப்பம் உள்ளவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். அதேபோல் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப தேதி முடிவுக்கு வரலாம். எனவே விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்வது நல்லது.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
என் மகனுக்கே வேலை இல்லைங்க? அடோப் நிறுவன இயக்குனரே லிங்க்டு-இன் தளத்தில் வேண்டுகோள் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications