மாதஊதியம் ரூ.18,000.. தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத்துறையில் ஏராள வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க அழைப்பு!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகதார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள ஏராளமான செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரை மாவட்ட வாரியாக ஒவ்வொரு பணியிடங்களை நிரப்புவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தான் தற்போது தஞ்சாவூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் முக்கிய விபரங்கள் வருமாறு:

காலியிடங்கள் எவ்வளவு?
தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 140 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகதாார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள 140 செவிலியர் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளம் எவ்வளவு?
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் அதிகபட்சமாக 50 வயதுக்குள் இருக்க வேண்டும். அதோடு செவிலியர் பட்டயபடிப்பு (DGNM) அல்லது இளங்கலை நர்சிங் (B.sc Nursing) படிப்பை முடித்திருக்க வேண்டும். இது ஒப்பந்த அடிப்படையிலான பணி என்பதால் மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்படும்.

கடைசி தேதி என்ன?
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பூர்த்தி செய்து உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றுமு் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்துக்கு ஜனவரி 30ம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக அல்லது தபால் மூலம் அனுப்பலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‛‛செயற் செயலாளர், மாவட்ட நலச்சங்கம் மற்றும் துணை இயக்குநர், துணை இயக்கநர் சுகாதார பணிகள் அலுவலகம், காந்திஜி ரோடு, Near LIC Building, தஞ்சாவூர், 613 001'' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். சந்தேகங்களுக்க 04362 - 273503 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
பணி தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய Click Here
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம்











Click it and Unblock the Notifications