TN Police jobs: தமிழ்நாடு காவல்துறையில் 2,833 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. விட்றாதீங்க
சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 2,833 பணியிடங்களை (TN Police jobs - TNUSRB) நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். எனவே ஆர்வமும் தகுதியும் இருந்து இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் மறக்காமல் இன்றே விண்ணப்பித்து விடுங்கள்.
தமிழ்நாடு காவல்துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பது பல இளைஞர்களின் கனவாக உள்ளது. கல்லூரி படிப்பின்போதே விளையாட்டுகளில் ஆர்வமாக சேர்ந்து போலீஸ் வேலை கனவுடன் படித்து வருகிறார்கள். கல்லூரி படிப்பை முடித்த பிறகு தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இதில் கான்ஸ்டபிள் தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திருந்த தேர்வர்களுக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது.

பணியிடங்கள் விவரம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. மொத்தம் 2,833 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருந்தது. 180 சிறைக்காவலர்கள், 631 தீ அணைப்பு வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித் தகுதி:
10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தியானவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். 1.07.2023 படி குறைந்தபட்சம் 18 வயதும் அதிகபட்சமாக 26 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. (வயது உச்ச வரம்பில் அரசு விதிகளின் படி தளர்வுகள் உண்டு. எனவே பிரிவுகளுக்கு தகுந்தபடி மாறுபடும்)
சம்பளம் எவ்வளவு?:
சம்பளத்தை பொறுத்தவரை இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான ஊதிய விகிதம் ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?:
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் இன்று 21.09.2025 ஆகும்.
தேர்வு அறிவிப்பினை படிக்க: https://www.tnusrb.tn.gov.in/
-
IT Jobs: பெங்களூர் எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. ஜூன் 15ல் ஆன்லைனில் இண்டர்வியூ -
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. 12ம் வகுப்பு தகுதிதான்.. ஆரம்பமே 21,500 சம்பளம்.. மதுரையில் பணியிடம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications