TNPSC DEO Job: பிஎட் படிச்சிருக்கீங்களா? பள்ளிக் கல்வித்துறையில் வேலை இருக்கு.. உடனே விண்ணப்பிங்க
சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2023.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

இதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 13.01.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.T. or B.Ed முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சம்பளம் ரூ. 56,900 - 2,09,200
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2023.
பொதுப் பிரிவு - 2, பொதுப் பிரிவு பெண்கள் - 1,பிற்படுத்தப்பட்ட வகுப்பு - 2,பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் - 1,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் [LD (BL)/CP/LC/DF/AC]- 1,ஆதி திராவிடர் - 2, பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும் ஆசிரியராகப் பணிபுரிவோர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர்களுக்கு வயது வரம்பு இல்லை. மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.
இது போன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. இணையவழி விண்ணப்பத்துல் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார். விண்ணப்பதாரர், தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச் சேவை மையங்களையோ குற்றம் சாட்டக் கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்டஇணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர், நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதன்மைத் தேர்வு விவரங்கள் வெளியாகும். முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை தேர்வாக நடைபெறும். இதில் 175 பொது அறிவு வினாக்கள் மற்றும் 25 கணித வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 40. இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள் பொது அறிவு. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம். நான்காம் தாளில் கல்வி பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150 செலுத்த வேண்டும். இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. சென்னை: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2023.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.
இதற்கான எழுத்துத் தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 13.01.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.T. or B.Ed முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சம்பளம் ரூ. 56,900 - 2,09,200
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2023.
பொதுப் பிரிவு - 2, பொதுப் பிரிவு பெண்கள் - 1,பிற்படுத்தப்பட்ட வகுப்பு - 2,பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் - 1,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் [LD (BL)/CP/LC/DF/AC]- 1,ஆதி திராவிடர் - 2, பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும் ஆசிரியராகப் பணிபுரிவோர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர்களுக்கு வயது வரம்பு இல்லை. மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்.

இது போன்ற தவறான மற்றும் நேர்மையற்றவர்களால் விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும் எவ்வித இழப்புக்கும் தேர்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. இணையவழி விண்ணப்பத்துல் குறிப்பிடப்படும் அனைத்துத் தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பாவார். விண்ணப்பதாரர், தேர்விற்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும் தவறு ஏற்படின், தாங்கள் விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச் சேவை மையங்களையோ குற்றம் சாட்டக் கூடாது. விண்ணப்பதாரர் பூர்த்தி செய்யப்பட்டஇணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும் முன்னர், நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்.
முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதன்மைத் தேர்வு விவரங்கள் வெளியாகும். முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை தேர்வாக நடைபெறும். இதில் 175 பொது அறிவு வினாக்கள் மற்றும் 25 கணித வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 40. இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள் பொது அறிவு. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம். நான்காம் தாளில் கல்வி பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ. 150 செலுத்த வேண்டும். இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

Click it and Unblock the Notifications