"அண்ணே... ஒரு மனிதாபிமானத்தோடு..."
இன்ஸ்பெக்டர் கவுண்டமணியும் ஏட்டு செந்திலும்..
இன்ஸ் கவுண்டர்: யோவ் ஏட்டு செந்தில்... இவன் பயங்கரமான கேடி.. மெட்ராஸில் இருந்து தப்பி இங்க வந்திருக்கான்..இவனை பத்திரமாக அடைச்சு வை...
ஏட்டு செந்தில்: யெஸ் சார்.. அப்படியே செய்றேன் சார்..
இன்ஸ் கவுண்டர்: இவன் என்ன கேட்டாலும் வாங்கித் தராதே.. ரொம்ப பேரை நடிச்சே ஏமாத்திருவான் ஜாக்கிரதை..
ஏட்டு செந்தில்: யெஸ் சார்.. அப்படியே செய்றேன் சார்..
இன்ஸ் கவுண்டர்: சரி.. நான் ரவுண்ட்ஸ் போய்ட்டு வர்றேன்.. சூதானமாக பாத்துக்க
ஏட்டு செந்தில்: ஓகே சார்...
(சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் கவுண்டமணி திரும்பி வர)
இன்ஸ் கவுண்டர்: ஏட்டு செந்தில், அந்த ரவுடிய கூப்பிட்டு வா.. நைட் டிரெய்ன்ல மெட்ராஸுக்கு கூப்பிட்டு போகனும்..
ஏட்டு செந்தில்: சார்... அதுவந்து...
இன்ஸ் கவுண்டர் பதற்றமாகி.. ஏய்.. என்னடா அதுவந்து.. தப்பிக்க விட்டுட்டீயா
ஏட்டு செந்தில்: சார்.. தப்பிக்க எல்லாம் விடலை.. ஜஸ்ட் திறந்துதான் விட்டேன்...
இன்ஸ் கவுண்டர்: என்னது திறந்து விட்டியா? ஏன்டா திறந்துவிட்ட? என் பொழப்புக்கே வேட்டு வெச்சிட்டியே..
ஏட்டு செந்தில்: நான் ரொம்ப நேர்மையானவன்னு உங்களுக்கே தெரியும் சார்..
இன்ஸ் கவுண்டர்; அந்த கருமாந்திரம் இப்ப எதுக்குடா? எதுக்குடா அவனை திறந்துவிட்ட ?
ஏட்டு செந்தில்: அந்த ரவுடியோட அம்மா இந்த ஊர் ஹாஸ்பிட்டல்லதான் கேன்சருக்கு ட்ரீட்மெண்ட் எடுக்கிறாங்களாம்..
இன்ஸ் கவுண்டர்: அதுக்கு...
ஏட்டு செந்தில்: அவங்க சாக பொழக்க இருக்கிறதால அவங்களை பார்க்கனும் கேட்டான்..
இன்ஸ் கவுண்டர்: அவன் கேட்டான்னு தொறந்து விட்டுறவியா?
ஏட்டு செந்தில்: சார் நானும் ஒரு நெஞ்சு நெறஞ்ச "மனிதாபிமானத்தோடு' திறந்துவிட்டேன்..
இன்ஸ் கவுண்டர்: என்னது நெஞ்சு நெறஞ்ச மனிதாபிமானத்தோடு திறந்துவிட்டியா? எங்கேயே கேட்ட மாதிரி இருக்கேடா சாமீ....
ஏட்டு செந்தில்: நாட்டுல பெரியவங்களே பொறுப்பில இருக்கிறவங்களோ இது போல மனிதாபிமனாத்தோடு நடக்கிறாங்களே.. நானும் அவங்கலை பினப்ற்றி நடக்கலாம்னுதான்..
இன்ஸ் கவுண்டர்: ஆஹா. டேய். நீ என்னமோ வெவகாரத்தை பேசுறன்னு மட்டும் தெரியுது.. இதெல்லாம் ஆகற காரியமில்லை ஆளை விடுடா.. நானே சமாளிச்சுக்கிறேன்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications