குழந்தை நீதி கதைகள்: இதுவும் கிடைக்கலைன்னா? உண்மையை உணர்த்திய அம்மா..
சென்னை: Kids story in Tamil: ஹாய் குட்டிஸ் எப்படி இருக்கீங்க. ஸ்கூல் போற சுட்டீஸ் கிட்ட ஒரு கேள்வி? உங்களில் எத்தனை பேரு உங்களுடைய உணவுகளை வீணடிக்காமல் சாப்பிடுகிறீர்கள்? உங்க நண்பர்கள் உணவுகளை வீணாக்கினால் நீங்க என்ன பண்ணுவீங்க. நம்ம கதையில் வர இந்த பையன் என்ன பண்றான்னு படிச்சி தெரிஞ்சிக்கோங்க.
ரித்து, ரித்து.. மகளை அழைத்து கொண்டே அம்மா வெளியில் வந்தார். என்ன அம்மா என்றாள் ரித்து. ஸ்கூலுக்கு எடுத்துட்டு போற சாப்பாட்டை ஏன் மிச்சம் வைக்கிற? வேற எதுவும் சாப்டியா? என்றார் அம்மா. ஓ, அதுவா சாக்லேட் கேக் வாங்கி சாப்பிட்டேன் மா என்றாள் ரித்து.

உணவுகளை வீணாக்காதே, இது கூட கிடைக்காமல் நிறைய பேர் இருக்கிறார்கள் என்றார் அம்மா. ரித்து எதையுமே காதில் வாங்கி கொள்ளவில்லை. சரி சரி என்று சொல்விட்டு பள்ளிக்கு கிளம்பி சென்றாள்.
மீண்டும் அவளது டிபன் பாக்ஸில் சாப்பாடு மீதம் வைத்து வீணாக்கி இருந்தாள். அம்மாவுக்கு கோபமாக இருந்தது. ரிதுவுக்கு எடுத்து கூற முடிவு செய்தார்.
ரித்து இங்க வா.. என்ற அம்மா. இப்படி தினமும் உணவை வீணடிக்கிறாய், இது இல்லாமல் இங்கு பலரும் இருக்கிறார்கள். ஒருவேளை நாளை நம்ம வீட்டில் உணவு தீர்ந்து போனால் என்ன செய்வாய் என்றார். சரி மா, நான் கேக் சாப்பிட்டு கொள்கிறேன் என்றாள் ரித்து. அம்மா சொன்னார், சரி அது வாங்க பணம் வேண்டும் அல்லவா, அதுவும் தீர்ந்துவிட்டால் என்ன செய்வாய் என்றார் அம்மா. அதுதான் நம்ம வீட்டில நூடுல்ஸ் இருக்குல்ல அதை செஞ்சி தாங்க என்றாள். சொல்லிவிட்டு அம்மா நூடுல்ஸ் பண்ணிட்டு கூப்பிடுங்க என்று ஓடி விட்டாள்.
ரித்துவிற்கு உணவின் அருமையை புரிய வைக்க அம்மா முடிவு செய்தார். டிபன் பாக்ஸில் உணவின் அளவை குறைத்தார். ரித்து வீட்டுக்கு வந்ததும் அம்மா சாப்பாடு போதவில்லை. நல்ல வேல கேக் சாப்பிட்டேன் என்றாள். இந்த முறை பாக்கெட் மணி கொடுக்காமல் உணவையும் குறைந்த அளவே வைத்து விட்டார் அம்மா. ரித்து வீட்டுக்கு வந்ததும் அம்மா எனக்கு பசிக்குது. அம்மா சொன்னார் உணவு காலியாகி விட்டது. இனிமேல் இவ்வளவுதான் என்றார் அம்மா.
மறுநாள் ரித்து ஸ்கூலில் சாப்பிட்ட உணவு சுத்தமாக அவளுக்கு பத்தவில்லை. சரியான பசியில் வீட்டிற்கு வந்தாள். அம்மா எனக்கு நூடுல்ஸ் பண்ணி தாங்க, ரொம்ப பசிக்குது என்றாள். அம்மா சொன்னார் நூடுல்ஸ் தீர்ந்துவிட்டது. ஆனால் அம்மா எனக்கு பசிக்குதே. நீ உணவை வீணடிக்காமல் இருந்தால் உனக்கு போதுமான அளவுக்கு இப்பொது கையில் பணம் இருந்திருக்கும் அல்லவா என்றார். வீட்டிலும் உணவு இருந்திருக்கும், இனிமேலாவது உணவை வீணடிக்காதே. ஒருநாள் அது கிடைக்காமல் கூட போகலாம் என்றார் அம்மா. ரித்து அம்மாவிடம் மன்னிப்பு கேட்டாள். அதன் பிறகு அவள் எப்போதுமே உணவை வீணடிக்கவில்லை. கொடுக்கும் பாக்கெட் மணியையும் சேர்த்து வைத்தாள்.
எனவே குட்டீஸ், உணவு என்பது விலைமதிப்பற்றது. நம்மில் பலருக்கும் அது ஒருவேளை மட்டுமே கிடைக்கும் பொருளாக இருக்கலாம். முடிந்தவரை உணவை வீணடிக்காதீர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications