
"ஆஹா.. இது அதுல்ல.." தெறிக்கவிடும் இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் மீம்ஸ்
சென்னை: டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோதவுள்ளது. இதற்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் வகையில் ரசிகர்கள் வெளியிட்டுள்ள ஏராளமான மீம்ஸ் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன. கடந்த ஆண்டு அடைந்த படுதோல்விக்கு பின் இந்திய அணி அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. அதேபோல் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட உள்ளது இந்திய ரசிகர்கள் மத்தியில் சிறிதாக பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர்கள் அதிகம் என்பதோடு, அனைத்து பேட்ஸ்மேன்கள் பெரிய ஹிட்டர்களாக இருப்பதும் முக்கியக் காரணமாக உள்ளது. அதேபோல் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா ஃபார்ம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை வைத்து ரசிகர்கள் ஏராளமான மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.
என்னது மழைக்கு லீவு வேணுமா? இன்னிக்கு சன்டே ஸ்கூல் லீவ் தான்யா! இணையத்தை கலக்கும் மழை மீம்ஸ்!

இந்திய ரசிகர்களுக்கு எச்சரிக்கை
அந்த வகையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, நாக் அவுட் போட்டிகளில் வெற்றிபெறுவது முக்கியம் வாய்ந்தது தான். அதற்காகவே நாக் அவுட் போட்டிகளில் பெற்ற வெற்றி மட்டுமே நமது கிரிக்கெட் வாழ்க்கையை சொல்லாது. ஏனென்றால் ஆண்டு முழுக்க நாம் ஏராளமான உழைப்பை கொடுத்து வருகிறோம் என்று தெரிவித்தார். இதனை வைத்து கோயில் படத்தில் வரும் வடிவேலு புகைப்படத்தை வைத்து சிக்னல் கொடுத்துட்டாங்க, தயாராக இருப்போம் என்று எச்சரிக்கையாக இருக்கும் வகையில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

குருசிஷ்யன் ரஜினி - பிரபு
இதேபோல் ஃபார்மின்றி மோசமாக செயல்பட்டு வரும் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனிடையே பேட்டிங் பயிற்சியின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை குருசிஷ்யன் படத்தில் பாண்டியனை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்காக ரஜினி - பிரபுவும் கையை உடைத்து காயம் ஏற்படுத்துவார்கள். அதுபோல் விராட் கோலியும் - சூர்யகுமார் யாதவும் இணைந்து ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்படுத்தியது போல் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணியாக இந்தியா
இதேபோல் ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி பலமுறை தோல்வியை சந்தித்துள்ளது. அண்மையில் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, கடந்த டி20 உலகக்கோப்பை லீக் போட்டி என ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு பல தோல்விகளை அடைந்துள்ளது. இதனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து எதிர்த்து விளையாட வேண்டாம் என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
ஆனால் இரு அரையிறுதிப் போட்டிகளும் மழையால் ரத்து செய்யப்பட்டால், குரூப் சுற்று வெற்றி அடிப்படையில் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள வேண்டும். இதனை உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கவுண்டமணி கார்த்திக்கை ஏமாற்றிவிட்டு பல கி.மீ. தூரம் ஓடி வந்து வீட்டை திறந்து பார்க்கும் போது கார்த்திக் இருக்கும் காட்சியை பார்க்கும் புகைப்படத்தை போட்டி மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.

புலிகேசி ரோஹித் ஷர்மா
இதேபோல் இந்தியா - இங்கிலாந்து அணி மோதும் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிபெறும் என்று ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால் மும்பை அணிக்கு எதிராக எப்போதும் பட்லர் சிறப்பாக பேட்டிங் செய்வார். அதற்கு அவரை மும்பை அணியில் இருந்து நீக்கியதே காரணம் என்று ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ப்ளூ ஜெர்சி அணிந்திருக்கும் இந்திய அணியை, மும்பை அணி என்று நினைத்து பட்லர் வெளுத்துவிடுவாரோ என்று புலிகேசி கெட்டப்பில் இருக்கும் மும்பை வீரர்களான ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் இருவரும் பேசுவதும் போல் வெளியாகிய மீம் ரசிகர்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.